முதல் டி20 : ஹிட்மேன் தலைமையில் களமிறங்க போகும் 11 பேர் கொண்ட – இந்திய உத்தேச அணி இதோ

Rohith
- Advertisement -

இலங்கைக்கு எதிராக தனது சொந்த மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி பங்குபெறும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் பிப்ரவரி 24, 26 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த டி20 தொடரின் முதல் போட்டி பிப்ரவரி 26 அன்று அதாவது நாளை இரவு 7 மணிக்கு உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ நகரில் இருக்கும் “அட்டல் பிகாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில்” இரவு 7 மணிக்கு துவங்க உள்ளது.

INDvsSL

- Advertisement -

இந்த போட்டியில் பங்கேற்பதற்காக ஏற்கனவே லக்னோ சென்றடைந்த்துள்ள இந்தியா மற்றும் இலங்கை வீரர்கள் அங்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தப் போட்டியை இந்தியாவில் இருக்கும் ரசிகர்கள் ஸ்டார்ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் ஆப் வாயிலாக கண்டு களிக்கலாம். அதேசமயம் வரலாற்றுச் சிறப்புமிக்க டிடி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி சேனலிலும் ரசிகர்கள் இலவசமாக இந்த போட்டியை பார்க்க முடியும்.

வலுவான இந்தியா:
இந்த தொடருக்கு முன்பாக கடந்த சில தினங்களுக்கு முன் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3 – 0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்தியா ஒயிட்வாஷ் வெற்றியுடன் கோப்பையை முத்தமிட்டது. அதன் வாயிலாக உலகின் புதிய நம்பர் ஒன் டி20 அணியாக சாதனை படைத்துள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா சொந்த மண்ணில் நடைபெறும் இந்த தொடரையும் எளிதாக வெற்றி பெற்று கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

INDvsSL

மறுபுறம் கடந்த சில தினங்களுக்கு முன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 4 – 1 என்ற கணக்கில் பரிதாப தோல்வி அடைந்த இலங்கை வலுவான இந்தியாவை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்ள உள்ளது. இருப்பினும் இந்திய கால சூழ்நிலைகள் பற்றி அந்த அணிக்கு தெரிந்து இருக்கும் என்பதால் தசுன் ஷனாகா தலைமையிலான இலங்கை வீரர்கள் இந்த தொடரில் வெற்றி பெறுவதற்கு போராடுவார்களா என்ற எதிர்பார்ப்பு இலங்கை ரசிகர்களிடம் உள்ளது.

- Advertisement -

இந்திய ப்ளேயிங் 11:
வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் ஐசிசி டி20 உலக கோப்பை 2022 கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. எனவே அந்தப் உலக கோப்பைக்கு முன்பாக தரமான வீரர்களை கொண்ட புதிய அணியை உருவாக்கும் முயற்சியில் இந்தியாவின் தலைமை பொறுப்பில் புதிதாக பொறுப்பேற்றுள்ள கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் ஈடுபட்டு வருகிறார்கள். அந்தவகையில் டி20 உலகக் கோப்பைக்கு தேவையான இந்திய வீரர்களை தேர்வு செய்ய ஏதுவாக நடைபெறும் இந்த இலங்கை டி20 தொடரில் முதல் போட்டியில் களமிறங்கும் உத்தேச இந்திய அணி பற்றி இப்போது பார்ப்போம்.

indvswi

1. ஓப்பனிங் : இந்தப் போட்டியில் முதல் தொடக்க வீரராக கேப்டன் ரோகித் சர்மா விளையாடுவார் என்பதில் சந்தேகம் இல்லாத நிலையில் மற்றொரு தொடக்க வீரருக்கான இடத்திற்கு இஷான் கிசான் மற்றும் ருதுராஜ் கைக்வாட் ஆகியோரிடையே போட்டி நிலவுகிறது. ஏனெனில் இதில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் கேஎல் ராகுல் காயமடைந்ததால் முழு வாய்ப்பு பெற்ற இஷான் கிசான் அதிக பந்துகளை சந்தித்து குறைந்த ரன்களை மட்டுமே எடுத்தார். அதனால் 3வது போட்டியில் 4வது இடத்தில் களமிறங்கிய ரோஹித் சர்மா தனது இடத்தை ருதுராஜ் கைக்வாட்க்கு கொடுத்த போதிலும் அதில் ருத்ராஜ் ரன்கள் அடிக்க தடுமாறினார். இருப்பினும் அந்த ஜோடிக்கு மீண்டும் வாய்ப்பளிக்க ரோஹித் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

- Advertisement -

2. மிடில் ஆர்டர்: இந்த தொடரில் மிடில் ஆர்டரில் விளையாடி வந்த நட்சத்திரம் விராட் கோலி மற்றும் கீப்பர் ரிஷப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சூர்யகுமார் யாதவ் நேற்று காயத்தால் விலகினார். எனவே மிடில் ஆர்டரில் ஷ்ரேயஸ் ஐயர், நெடுநாட்களுக்கு பின் விக்கெட் கீப்பராக இடம்பிடித்துள்ள சஞ்சு சாம்சன் ஆகியோர் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Jadeja

3. ஆல் ரவுண்டர்கள்: கடந்த சில மாதங்களாக காயத்தால் அவதிப்பட்டு வந்த நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா அதிலிருந்து குணமடைந்து இந்த இலங்கை தொடருக்கு திரும்பியுள்ளது இந்திய ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. எனவே இந்த முதல் போட்டியில் முதல் ஆல்-ரவுண்டராக ரவீந்திர ஜடேஜா விளையாடுவார் என்பதில் சந்தேகமில்லை. அவருடன் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் அசத்திய வெங்கடேஷ் ஐயர் விளையாடுவார் என நம்பப்படுகிறது.

4. பவுலர்கள்: சுழல் பந்துவீச்சை பொறுத்தவரை வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அசத்திய அனுபவ வீரர் யூஸ்வென்ற சஹால் விளையாடுவார் என நம்பலாம். அதைப்போல் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தீபக் சஹர் காயம் அடைந்ததால் ஹர்ஷல் படேல், புவனேஸ்வர் குமார் ஆகியோருடன் நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ரா களமிறங்குவார் என தெரியவருகிறது.

Bumrah

இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் களமிறங்கும் ரோகித் சர்மா தலைமையிலான 11 பேர் உத்தேச இந்திய அணி இதோ:
ருதுராஜ் கைக்வாட், இஷான் கிசான், ரோஹித் சர்மா (கேப்டன்),  ஷ்ரேயஸ் ஐயர், சஞ்சு சாம்சன் (கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, வெங்கடேஷ் ஐயர், யூஸ்வென்ற சஹால், ஹர்ஷல் படேல், புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா.

Advertisement