இந்த தலைமுறையின் பெஸ்ட் பேட்ஸ்மேன்.. விராட் கோலியும் அதுக்கு தகுதியானாவர்.. யுவராஜ் சிங் கருத்து

Yuvraj Singh 4
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. சொல்லப்போனால் இதுவே விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருடைய கடைசி டி20 உலகக் கோப்பையாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடந்த டி20 உலகக் கோப்பையில் தோல்வியை சந்திக்க சீனியர் வீரர்கள் முக்கிய காரணமாக அமைந்தனர்.

அதனால் இம்முறை அவர்களை கழற்றி விட்டு ஹர்திக் பாண்டியா தலைமையில் புதிய இளம் அணியை களமிறக்கும் முடிவை பிசிசிஐ கையிலெடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்தன. இருப்பினும் கடந்த உலகக் கோப்பையில் ஹர்திக் பாண்டியா காயமடைந்ததை தொடர்ந்து அனுபவத்திற்கு மதிப்பளித்து மீண்டும் ரோகித் சர்மா இந்திய கிரிக்கெட் கேப்டனாக செயல்பட உள்ளார். அவருடைய தலைமையில் விராட் கோலி மீண்டும் டி20 உலகக் கோப்பையில் களமிறங்க உள்ளார்.

- Advertisement -

யுவராஜ் பாராட்டு:
இந்நிலையில் நவீன கிரிக்கெட்டில் அனைத்து சாதனைகளையும் உடைத்து சிறந்த பேட்ஸ்மேனாக செயல்பட்டு வரும் விராட் கோலியின் 2024 டி20 உலகக் கோப்பை சாம்பியன் மெடலை வெல்வதற்கு தகுதியானவர் என்று யுவராஜ் சிங் பாராட்டியுள்ளார். அந்தப் பட்டத்தை வெல்வதற்கு ரோகித் சர்மா தகுதியானவர் என்று சமீபத்தில் தெரிவித்திருந்த அவர் தற்போது விராட் கோலி பற்றி ஐசிசி இணையத்தில் பேசியுள்ளது பின்வருமாறு.

“கண்டிப்பாக இந்த தலைமுறையில் அவர் அனைத்து சாதனைகளையும் உடைத்துள்ளார். இந்த தலைமுறையில் 3 வகையான கிரிக்கெட்டிலும் அவர் சிறந்த பேட்ஸ்மேன். எனவே அவரும் உலகக்கோப்பை மெடலை வெல்வதற்கு தகுதியானவர் என்று நான் கருதுகிறேன். அவர் ஒரு சாம்பியன் (2011) பட்டத்துடன் திருப்தியடைபவர் கிடையாது. எனவே அவர் இந்த மெடலுக்கும் தகுதியானவர். அவர் தன்னுடைய ஆட்டத்தை புரிந்து செயல்படுகிறார் என்று நினைக்கிறேன்”

- Advertisement -

“மொஹாலியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி உட்பட நம்மால் கடைசி வரை நின்றால் இந்தியாவை வெற்றி பெற வைக்க முடியும் என்பதை அவர் அறிவார். குறிப்பாக சேசிங் செய்யும் போது ஒருமுறை தன்னம்பிக்கையை பெற்று விட்டால் சூழ்நிலையை எப்படி சமாளித்து, எந்த பவுலர்களை அட்டாக் செய்து போட்டியை மாற்ற முடியும் என்பது அவருக்கு தெரியும். 2012, 2016 டி20 உலகக் கோப்பைகளில் அவர் தன்னுடைய வாழ்நாள் ஃபார்மில் இருந்தார்”

இதையும் படிங்க: ஓனரா இருந்தா என்ன? திட்டுங்க வேணாம்ன்னு சொல்லல ஆனா.. லக்னோ உரிமையாளரை விளாசிய கிரேம் ஸ்மித்

“2014 பைனலில் அவருடன் நான் சிறிய பார்ட்னர்ஷிப் அமைத்தேன். பின்னர் அவர் தோனியுடன் பேட்டிங் செய்தார். அவர் வலைப்பயிற்சியில் பந்தை கண்மூடித்தனமாக அடிக்காமல் அதை ஒரு போட்டியாக நினைத்து பேட்டிங் செய்வார். அவர் அதை திரும்பத் திரும்ப செய்வார். அதை நான் பல வீரர்களிடம் பார்த்ததில்லை. எனவே அதுவே அவருடைய வெற்றிக்கு காரணம் என்று நினைக்கிறேன்” எனக் கூறினார்.

Advertisement