நாக் அவுட் சுற்றை தொடுவதே கஷ்டம் தான்.. காயத்தால் விலகிய முக்கிய வீரர்.. 2023 உ.கோ இலங்கை அணி அறிவிப்பு

hasaranga srilanka
- Advertisement -

இந்தியாவில் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை நடைபெறும் ஐசிசி 2023 உலகக் கோப்பையில் புதிய சாம்பியன் பட்டத்தை வெல்வதற்காக அனைத்து அணிகளும் இறுதிக்கட்டமாக தயாராகி வருகின்றன. மேலும் இத்தொடருக்காக உலகின் பல்வேறு நாடுகளும் தங்களுடைய 15 பேர் கொண்ட கிரிக்கெட் அணியை ஏற்கனவே வெளியிட்ட நிலையில் 1992 சாம்பியன் இலங்கை ஒரு வழியாக நேற்று தங்களின் அணியை அறிவித்தது.

1992க்குப்பின் 2007, 2011 ஆகிய அடுத்தடுத்த தொடர்களில் ஃபைனல் செல்லும் அளவுக்கு மிகவும் தரமாக இருந்த அந்த அணி சங்ககாரா, முரளிதரன் போன்ற ஜாம்பவான்கள் ஓய்வுக்கு பின் தரமான அடுத்த தலைமுறை வீரர்கள் இல்லாமல் தடுமாறி வருகிறது. அதன் காரணமாக ஐசிசி தரவரிசையில் பின்தங்கிய அந்த அணி இந்த உலகக் கோப்பைக்கு நேரடியாக தகுதி பெறவில்லை.

- Advertisement -

இலங்கை அணி அறிவிப்பு:
இருப்பினும் இளம் வீரர்களுடன் சிறப்பாக செயல்பட்டு 2022 ஆசிய கோப்பையை வென்ற அந்த அணி அதே உத்வேகத்துடன் கடந்த ஜூன் மாதம் ஜிம்பாப்வே மண்ணில் நடைபெற்ற குவாலிபயர் தொடரில் மிகச் சிறப்பாக விளையாடி ஃபைனலில் கோப்பையை வென்று இத்தொடருக்கு தகுதி பெற்றது. ஆனால் அந்தத் தொடரில் 22 விக்கெட்டுகள் எடுத்து வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்ட முதன்மை ஸ்பின்னர் வணிந்து ஹஸரங்கா இந்த உலகக் கோப்பையிலிருந்து காயத்தால் வெளியேறியுள்ளது இலங்கைக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.

ஆனாலும் தசுன் சனாகா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை அணியில் தீக்சனா, வெல்லாலகே ஆகியோர் சுழல் பந்து வீச்சு துறையில் ஓரளவு வலு சேர்ப்பவர்களாக இருக்கின்றனர். அதே போல வேகப்பந்து வீச்சு துறையில் மலிங்கா போல் அசத்தும் பதிரனா, கௌசன் ரஜிதா, லகிரு குமாரா, மதுசங்கா ஆகியோர் நல்ல திறமை வாய்ந்தவர்களாக இருக்கின்றனர்.

- Advertisement -

அதே போல பேட்டிங் துறையில் குசால் மெண்டிஸ், குசால் பெரேரா, நிஷாங்கா, கருணாரத்னே ஆகியோர் டாப் ஆர்டரில் அதிரடியாக ரன்கள் குவிக்கும் திறமையை ஏற்கனவே காண்பித்துள்ளதால் தேர்வாகியுள்ளனர். மேலும் மிடில் ஆர்டரில் சமரவிக்ரமா, அசலங்கா தனஞ்செயா டீ சில்வா தாங்கி பிடிக்கும் அளவுக்கு தரத்தை கொண்டு இருக்கின்றனர்.

இதையும் படிங்க: IND vs AUS : ஒரே போட்டியில் இத்தனை மாற்றங்களா? புரிஞ்சிக்கவே நேரம் ஆகும் போலயே – இந்திய அணியின் முழுலிஸ்ட் இதோ

இருப்பினும் கிட்டத்தட்ட இதே வீரர்களுடன் 2023 ஆசிய கோப்பையில் சொந்த மண்ணில் படுதோல்வியை சந்தித்த அந்த அணி ஹஸரங்கா போன்ற முக்கிய வீரர் இல்லாமல் உலகக்கோப்பையில் டாப் அணிகளுக்கு சவாலை கொடுத்து நாக் அவுட் சுற்றை தொடுமா என்பதே சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது. இலங்கை அணி: தசுன் ஷானகா (கேப்டன்), குசால் மெண்டிஸ் (துணை கேப்டன்), குசால் பெரேரா, பதும் நிசாங்கா, சதீரா சமரவிக்ரமா, திமுத் கருணரத்னே, சரித் அஸலாங்கா, தனஞ்சயா டீ சில்வா, டுஷன் ஹேமந்தா, மஹீஸ் தீக்ஷனா, துணித் வெல்லாலகே, கௌசன் ரஜிதா, மதீஷா பதிரான, லஹிரு குமாரா, தில்ஷான் மதுஷங்கா (ரிசர்வ் : சமிகா கருணரத்னே)

Advertisement