IND vs AUS : ஒரே போட்டியில் இத்தனை மாற்றங்களா? புரிஞ்சிக்கவே நேரம் ஆகும் போலயே – இந்திய அணியின் முழுலிஸ்ட் இதோ

Rohit
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது ஒருநாள் போட்டியானது செப்டம்பர் 27-ஆம் தேதி ராஜ்கோட் நகரில் சற்றுமுன் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணியானது முதலில் பந்துவீச தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியில் ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழும் என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட படியே இன்றைய அணியில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

- Advertisement -

அந்த வகையில் இந்த போட்டியில் ரோகித் சர்மா, விராட் கோலி, குல்தீப் யாதவ் போன்ற வீரர்கள் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். அதே வேளையில் முதல் இரண்டு போட்டிகளிலும் விளையாடிய சுப்மன் கில், ஷர்துல் தாகூர், ருதுராஜ் கெய்க்வாட் போன்ற வீரர்கள் அணியிலிருந்து வெளியேறி உள்ளதால் அவர்களுக்கு பதிலாகவும் சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

மேலும் ஹார்டிக் பாண்டியா, இஷான் கிஷன் போன்ற வீரர்களும் இந்த போட்டியில் விளையாடவில்லை. இதன் காரணமாக இந்திய அணியில் இன்று 5 முழுநேர பேட்ஸ்மேன்கள், இரண்டு ஆல்ரவுண்டர்கள், ஒரு சுழற்பந்து வீச்சாளர், 3 வேகப்பந்து வீச்சாளர் என பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

- Advertisement -

அதன்படி இன்றைய மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : கடைசி நேரத்துல இந்த குழப்பம் எதுக்கு.. பேசாம அந்த தமிழக வீரருக்கு வேர்ல்டுகப் சான்ஸ் கொடுங்க – முதல் ஆளாக கவாஸ்கர் கோரிக்கை

1) ரோஹித் சர்மா, 2) விராட் கோலி, 3) ஷ்ரேயாஸ் ஐயர், 4) கே.எல் ராகுல், 5) சூரியகுமார் யாதவ், 6) ரவீந்திர ஜடேஜா, 7) வாஷிங்க்டன் சுந்தர், 8) குல்தீப் யாதவ், 9) முகமது சிராஜ், 10) ஜஸ்ப்ரீத் பும்ரா, 11) பிரசித் கிருஷ்ணா.

Advertisement