கடைசி நேரத்துல இந்த குழப்பம் எதுக்கு.. பேசாம அந்த தமிழக வீரருக்கு வேர்ல்டுகப் சான்ஸ் கொடுங்க – முதல் ஆளாக கவாஸ்கர் கோரிக்கை

Sunil Gavaskar 4
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5ஆம் தேதி முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது. அதில் 2011 போல கோப்பையை வென்று சரித்திரம் படைப்பதற்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் குல்தீப் யாதவ், அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா ஆகிய மூவருமே இடது கை அல்லது லெக் ஸ்பின்னர்களாக இருந்ததால் எதிரணியில் இருக்கும் வலது கை பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுக்க ஆஃப் பின்னர் தேவை என்று முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர்.

அந்த சூழ்நிலையில் நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பையில் அக்சர் பட்டேல் காயத்தை சந்தித்து வெளியேறியதால் உடனடியாக தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய தொடரில் தேர்வு செய்யப்பட்டனர். அதில் 2011 உலகக்கோப்பை உட்பட பல வெற்றிகளில் முக்கிய பங்காற்றி மேட்ச் வின்னராகவும் அனுபவிக்கவராகவும் இருக்கும் அஸ்வின் ஆஸ்திரேலிய தொடரில் விளையாடும் வாய்ப்பை பெற்றார்.

- Advertisement -

கவாஸ்கர் ஆதரவு:
அந்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திய அவர் முதலிரண்டு போட்டிகளில் 4 விளையாட்டுகளை எடுத்து அடுத்தடுத்த வெற்றிகளில் முக்கிய பங்காற்றினார். அதன் காரணமாக உலகக்கோப்பை அணியில் ரிசர்வ் வீரராக மட்டுமே தேர்வாகியுள்ள அவருக்கு நேரடியாக விளையாடும் 11 பேர் அணியில் வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு தமிழக ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

அந்த சூழ்நிலையில் அக்சர் பட்டேல் குணமடையாமல் போனால் நிச்சயமாக உலகக்கோப்பை வாய்ப்பு கொடுப்போம் என்று கேப்டன் ரோகித் சர்மா மறைமுகமாக நேற்று தெரிவித்தார். இந்நிலையில் உலக கோப்பைக்கு இன்னும் 8 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அக்சர் பட்டேல் 100% குணமடையாமல் போனால் குழப்பதுடன் தேர்வு செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கும் சுனில் கவாஸ்கர் அஸ்வினுக்கு வாய்ப்பு கொடுங்கள் என கோரிக்கை வைத்துள்ளார்.

- Advertisement -

“கடந்த 2 போட்டிகளில் அவர் பந்து வீசிய விதத்தை வைத்து உலகக் கோப்பை அணியில் தேர்வு செய்வதற்கு தகுதியானவர் என்பதை காட்டியுள்ளார் என்று நினைக்கிறேன். ஒருவேளை அக்சர் பட்டேல் காயத்தில் சிறிய சந்தேகம் இருந்தால் கூட உலகக் கோப்பையில் அவரால் முழுமையாக விளையாட முடியுமா? என்ற குழப்பம் ஏற்படும். ஏனெனில் எந்த ஒரு காயத்திலும் கவனமாக இருக்க வேண்டும்”

இதையும் படிங்க: வீடியோ : தூங்கவே இல்ல.. சான்ஸ் கொடுக்கலன்னா என்ன பண்றது.. வர்ணனையாளரான மிஸ்ராவை கலாய்த்த ரோஹித் சர்மா

“அதே சமயம் உலக கோப்பையில் ஒவ்வொரு அணியும் 100% ஃபிட்டாக இருக்கும் வீரர்களுடன் களமிறங்குவதை விரும்பும். எனவே அக்சர் படேல் உடல் தகுதியில் அணி நிர்வாகத்திற்கு சந்தேகம் இருந்தால் அஷ்வினுக்கு வாய்ப்பு கொடுக்கலாம். ஏனெனில் மொஹாலி போட்டியில் கடைசி 3 – 4 ஓவர்களை சிறப்பாக வீசிய அவர் இந்தூரில் கேரம் பந்துகளை அற்புதமாக பயன்படுத்தினார். எனவே அக்சர் படேல் விஷயத்தில் சந்தேகமிருந்தால் அஸ்வின் இந்திய அணியில் கம்பேக் கொடுக்கலாம்” என்று கூறினார்.

Advertisement