பார்த்தாலே கைகால் நடுக்கம் ! இலங்கை பவுலரின் பாக்கெட்டில் இந்திய வீரர் – இப்படியும் ஒரு சாதனையா

- Advertisement -

கிரிக்கெட்டில் எப்போதுமே பேட்ஸ்மேன்களும் பவுலர்களும் தங்களது அணிக்கு வெற்றியை தேடித் தருவதற்காக முழு திறமையை வெளிப்படுத்தி சம பலத்துடன் போட்டி போடுவார்கள். அதில் எப்போதாவது தரமான பேட்ஸ்மேனை விட மிகச்சிறப்பாக செயல்படும் பவுலர் அதிகமுறை அவுட் செய்து வெற்றி காண்பார். எடுத்துக்காட்டாக சர்வதேச கிரிக்கெட்டில் என்னதான் சச்சின் டெண்டுல்கர் ரன் மெஷினாக இருந்தாலும் ஆஸ்திரேலியாவின் கிளன் மெக்ராத்துக்கு எதிராக அவரின் செயல்பாடு சுமாராகவே இருந்தது. அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடரில் ஒரு பவுலர் மீண்டும் மீண்டும் 3 முறை ஒரு தரமான பேட்ஸ்மேனை அவுட் செய்து தனது பாக்கெட்டில் வைத்துள்ள வினோதத்தை பார்ப்போம்.

Avesh Khan

- Advertisement -

ஐபிஎல் தொடரின் லீக் சுற்று முடிந்து பரபரப்பாக நடைபெற்ற பிளே ஆப் சுற்றில் மே 27இல் நடைபெற்ற குவாலிபயர் 2 போட்டியில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் மோதின. அகமதாபாத் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு ராஜஸ்தானின் சிறப்பான பந்துவீச்சில் சரணடைந்ததை போல் 20 ஓவர்களில் 157/8 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு அதிக பட்சமாக இளம் வீரர் ரஜத் படிதார் 58 (42) ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் சார்பில் ஓபேத் மெக்காய் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

பெங்களூரு பரிதாபங்கள்:
அதை தொடர்ந்து 158 என்ற சுலபமான இலக்கை துரத்திய ராஜஸ்தானுக்கு ஜெய்ஸ்வால் – பட்லர் ஜோடி 5.1 ஓவரில் 61 ரன்கள் மிரட்டல் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல அடித்தளமிட்டது. அதில் ஜெய்ஸ்வால் 21 (13) ரன்களில் அவுட்டாக அடுத்து களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் மெதுவாக பேட்டிங் செய்து 23 (21) ரன்களிலும் அடுத்து வந்த தேவதூத் படிக்கல் 9 (12) ரன்களிலும் நடையை கட்டினார். இருப்பினும் மறுபுறம் நங்கூரமாக பெங்களூருவை புரட்டி எடுத்த ஜோஸ் பட்லர் 10 பவுண்டரி 6 சிக்சருடன் இந்த வருடத்தின் 4-வது சதத்தை அடித்து 106* (60) ரன்கள் விளாசி பினிஷிங் கொடுத்தார்.

Jos Buttler vs RCB

அதனால் 18.1 ஓவரில் 161/3 ரன்கள் எடுத்த ராஜஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2008க்குப் பின் 13 வருடங்கள் கழித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. மறுபுறம் முக்கிய போட்டியில் வழக்கம் போல மீண்டும் பேட்டிங் பந்து வீச்சில் சொதப்பிய பெங்களூரு முதல் கோப்பையை வெல்ல முடியாமல் வரலாற்றில் 15-வது முறையாக பரிதாபமாக வெளியேறியது.

- Advertisement -

ஹஸரங்கா – சாம்சன்:
அந்த போட்டியில் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் 23 (21) ரன்கள் எடுத்திருந்த போது இலங்கை சுழற்பந்து வீச்சாளர் வணிந்து ஹசரங்கா தனது மாயாஜால சுழலால் ஸ்டம்பிங் முறையில் அவுட் செய்து பெவிலியன் அனுப்பி வைத்தார். இதுமட்டுமல்லாமல் இதே 2022 வருடத்தில் லீக் சுற்றில் 2 முறை ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் மோதிய போது ஒரு போட்டியில் ஹசரங்காவிடம் கிளீன் போல்டான சஞ்சு சாம்சன் மற்றொரு போட்டியில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட்டாகி சென்றார்.

Hasaranga 2

1. மொத்தத்தில் இந்த வருடம் ஹசரங்காவை 3 போட்டிகளில் எதிர்கொண்ட சஞ்சு சாம்சன் அந்த 3 போட்டிகளிலும் சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். இதன் வாயிலாக “ஐபிஎல் வரலாற்றில் ஒரே வருடத்தில் ஒரு குறிப்பிட்ட பேட்ஸ்மேனை 3 முறை அவுட் செய்த முதல் பவுலர்” என்ற வினோதமான சாதனையை ஹசரங்கா படைத்தார்.

- Advertisement -

2. இதுமட்டுமல்லாமல் ஒட்டுமொத்த டி20 போட்டிகளில் ஹசரங்காவுக்கு எதிராக 7 போட்டிகளில் களமிறங்கிய சஞ்சு சாம்சன் அதில் 23 பந்துகளை சந்தித்து வெறும் 18 ரன்களை 3.60 என்ற தரைமட்டமான பேட்டிங் சராசரியில் 78.26 என்ற படுமோசமான ஸ்டிரைக் ரேட்டில் மட்டுமே எடுத்துள்ளார். 1 பவுண்டரி 2 சிக்சர்கள் அடித்துள்ள அவர் சந்தித்த 23 பந்துகளில் 18 பந்துகளில் டாட் பந்துகளாகும். அதாவது ரன் எடுக்காத பந்துகள். அதைவிட இந்த 7 இன்னிங்சில் 6 முறை அவரின் மாயாஜால சுழலில் சஞ்சு சாம்சன் சிக்கியுள்ளார்.

இதையும் படிங்க : தமிழக ரசிகர்களே அதிருப்தியடையும் அளவுக்கு மீண்டும் சொதப்பிய தமிழக வீரர் – என்ன நடந்தது?

ஹஸரங்கா பாக்கெட்டில்:
இத்தனைக்கும் இதே ஐபிஎல் தொடரில் எஞ்சிய சுழல்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக 107 பந்துகளை எதிர்கொண்டுள்ள சஞ்சு சாம்சன் அதில் 178 ரன்களை 166.35 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் தெறிக்க விட்டுள்ளார். ஆனால் ஹசரங்காவை பார்த்தால் மட்டும் கை கால் நடுங்கியது போல அவுட்டாகி சென்று விடுகிறார். இதனால் ஹசரங்காவின் பாக்கெட்டில் சஞ்சு சாம்சன் இருப்பதாக பல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கிண்டலடிக்கின்றனர்.

Advertisement