அவர் பவுலிங்கை மட்டும் அடிக்காதீங்க. மும்பையை வீழ்த்த தோனி போட்ட பிளான் பற்றி – மெய்சிலிர்க்கும் சிஎஸ்கே வீரர்

Dwaine Pretorius MS Dhoni
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் நடப்புச் சாம்பியன் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதிய 33-ஆவது லீக் போட்டி ரசிகர்களை எகிற வைத்தது என்றே கூறலாம். ஏப்ரல் 21-ஆம் தேதி நடைபெற்ற அந்த போட்டியில் கட்டாயம் வென்றே தீரவேண்டும் என்ற சூழ்நிலையில் ஐபிஎல் தொடரின் டாப் 2 வெற்றிகரமான அணிகள் மோதியதால் கடைசி ஓவர் வரை ஆட்டத்தில் அனல் பறந்தது. நவி மும்பையில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை போராடி 155/7 ரன்கள் சேர்த்தது.

அந்த அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா, இஷான் கிசான் போன்ற நம்பிக்கை நட்சத்திரங்கள் முதல் ஓவரிலேயே டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்த நிலையில் நடுவரிசையில் காப்பாற்றிய திலக் வர்மா 51* ரன்களும் சூர்யகுமார் யாதவ் 32 ரன்களும் எடுத்தனர். சென்னை சார்பில் அதிகபட்சமாக முகேஷ் சவுத்ரி 3 விக்கெட்டுகளையும் பிராவோ 2 விக்கெட்டும் எடுத்தனர்.

- Advertisement -

அதை தொடர்ந்து 156 என்ற இலக்கை துரத்திய சென்னைக்கு ருதுராஜ் 0 (1), மிட்செல் சாட்னர் 11 (9) போன்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுக்க 16/2 என தடுமாறிய அந்த அணியை ராபின் உத்தப்பா 30 (25) ரன்களும் அம்பத்தி ராயுடு 40 (35) ரன்களும் எடுத்து ஓரளவு காப்பாற்றினர். இருப்பினும் அடுத்ததாக வந்த இளம் வீரர் சிவம் துபே 13 (14) கேப்டன் ரவீந்திர ஜடேஜா 3 (8) ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட்டானது மீண்டும் சென்னைக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

கெத்தான பிரிட்டோரியஸ் – எஸ் தோனி:
அதனால் 106/6 என திண்டாடிய சென்னை தோல்வியின் பிடியில் சிக்கிய வேளையில் ஜோடி சேர்ந்த தென்ஆப்பிரிக்கா ஆல்ரவுண்டர் ட்வயன் பிரிடோரியஸ் எம்எஸ் தோனியுடன் இணைந்து அதிரடியாக ரன்களை குவித்தார். கடைசி நேரத்தில் 2 பவுண்டரி 1 சிக்சர் உட்பட முக்கியமான 22 (14) ரன்கள் எடுத்த அவர் கடைசி ஓவரின் முதல் பந்தில் வெற்றிக்காகப் போராடி அவுட்டானார். அதனால் போட்டியில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்பட்ட நிலையில் கடைசி 4 பந்துகளில் 16 ரன்கள் தேவைப்பட்ட போது ஜெயதேவ் உனட்கட் வீசிய அந்த ஓவரில் 6, 4, 2, 4 என அடுத்தடுத்து பவுண்டரிகளை பறக்கவிட்ட எம்எஸ் தோனி 16 ரன்களைக் குவித்து 28* (13) ரன்களை விளாசி அபார பினிஷிங் கொடுத்தார்.

- Advertisement -

இந்த திரில்லான வெற்றியால் இதுவரை பங்கேற்ற 7 போட்டிகளில் 2-வது வெற்றியை பதிவு செய்த சென்னை பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தொடர்ந்து நீடிக்கிறது. மறுபுறம் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணி என பெயரெடுத்த ரோகித் சர்மா தலைமையிலான மும்பை பங்கேற்ற 7 போட்டிகளிலும் தோல்வியடைந்து வரலாற்றிலேயே முதல் 7 போட்டிகளில் தோல்வியடைந்த என்ற மோசமான சாதனையுடன் லீக் சுற்றுடன் முதல் அணியாக வெளியேறுவது உறுதியாகிவிட்டது.

தோனியின் பிளான்:
இந்த போட்டியில் தோனி பினிஷிங் செய்தாலும் 22 ரன்கள் எடுத்த பிரிட்டோரியஸ் மிக முக்கிய பங்காற்றினார். அந்த வகையில் கடைசி 2 ஓவர்களில் மும்பையை சாய்க்க எம்எஸ் தோனி போட்ட ஒரு பிளான் பற்றி போட்டி முடிந்த பின் அவருடன் விளையாடிய பிரிட்டோரியஸ் தெரிவித்தார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“நான் பும்ராவுக்கு எதிரான ஓவரில் ஸ்கூப் ஷாட் அடிக்க முயற்சித்தேன். ஆனால் என்னிடம் வந்த அவர் பொறுமை, பொறுமை, பொறுமை என்று கூறியதால் பொறுமையுடன் இருந்தேன். அடுத்த ஒருசில பந்துகளில் மீண்டும் அவரிடம் இப்போது ஸ்கூப் ஷாட் அடிக்கட்டுமா என்று கேட்டபோது “சரி அடி” என பதிலளித்தார். அந்த வகையில் பினிஷிங் செய்வதில் அவர் ஒரு மாஸ்டர். அதை இன்றும் அவர் செய்து காட்டியுள்ளார். அத்துடன் மைதானத்திற்குள் சென்றபோது “நாம் இருவரும் டாட் வைக்காமல் 5 பவுண்டரிகளை அடித்தால் நம்மால் வெற்றியை நெருங்க முடியும்” என்று தோனியுடன் கூறினேன் அதற்கு அவர் “உங்களின் கணிப்பு சரிதான் என நினைக்கிறேன்” என்று பதிலளித்தார்” என்று கூறினார்.

அதாவது 18-வது ஓவரின் முடிவில் 128/6 என சென்னை தவித்தபோது கடைசி 2 ஓவரில் வெற்றிக்கு 28 ரன்கள் தேவைப்பட்டபோது 19-வது ஓவரை இந்தியாவின் நட்சத்திர பவுலர் ஜஸ்பிரித் பும்ரா வீச வந்தார். அப்போது 2-வது பந்தில் பவுண்டரி அடித்த பிரிடோரியஸ் 3-வது பந்தில் ஸ்கூப் ஷாட் அடிக்க முயற்சித்து 1 ரன் மட்டுமே எடுத்தார். அப்போது அவரிடம் சென்ற தோனி பும்ரா போன்ற தரமான பவுலரிடம் ரிஸ்க் எடுத்து அந்த ஷாட்டை எடுக்க வேண்டாம் எனக் கூறியதுடன் கடைசி ஓவரில் பார்த்துக் கொள்ளலாம் என தெரிவித்ததாக பிரிடோரியஸ் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : ஐ.பி.எல் தொடரில் இந்த 2 அணிகள் மோதினால் இந்தியா பாகிஸ்தான் போட்டி மாதிரி இருக்கும் – ஹர்பஜன் சிங் கருத்து

இருப்பினும் அதே ஓவரின் 4-வது பந்தை எதிர் கொள்வதற்கு முன்பாக மீண்டும் அந்த ஷாட் அடிப்பதற்கு தோனியிடம் கேட்ட அவருக்கு தோனியும் “சரி” என்று கூறியதால் அந்த பந்தில் தன்னம்பிக்கையுடன் வெற்றிகரமாக ஸ்கூப் ஷாட் அடித்ததாக பிரிடோரியஸ் தெரிவித்தார். கடைசி கட்ட பரபரப்பான தருணங்களில் இதுபோன்ற சரியான முடிவுகளை எடுக்க தெரிந்துள்ள அவர் பினிஷிங் செய்வதில் மாஸ்டர் என்றும் பிரிடோரியஸ் பாராட்டினார்.

Advertisement