ஐ.பி.எல் தொடரில் இந்த 2 அணிகள் மோதினால் இந்தியா பாகிஸ்தான் போட்டி மாதிரி இருக்கும் – ஹர்பஜன் சிங் கருத்து

Harbhajan
- Advertisement -

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே உலகெங்கிலும் பரவி வந்த கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்தது. இப்படி இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடைபெறாததால் சற்று வருத்தமடைந்த ரசிகர்கள் இந்த ஆண்டு நிச்சயம் ஐபிஎல் தொடரானது இந்தியாவில்தான் நடைபெற வேண்டும் என பிசிசிஐ இடம் கோரிக்கைகளை வைத்து இருந்தனர். அந்த வகையில் பி.சி.சி.ஐ-யும் தங்களது தீவிர முயற்சி மற்றும் சரியான திட்டமிடுதலுடன் கூடிய அட்டவணையை இந்த ஆண்டு வெளியிட்டு தற்போது 15வது ஐபிஎல் தொடரை சிறப்பாக நடத்தி வருகிறது.

IPL 2022 (2)

- Advertisement -

ஏற்கனவே 8 அணிகளுடன் நடைபெற்று வந்த இந்த ஐபிஎல் தொடரானது இந்த ஆண்டு கூடுதலாக லக்னோ மற்றும் குஜராத் ஆகிய அணிகளுடன் சேர்ந்து மொத்தம் 10 அணிகளுடன் இந்த தொடர் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு போட்டியும் ரசிகர்களுக்கு மிகவும் சுவாரஸ்யத்தையும், பொழுதுபோக்கும் வழங்கி வரும் வேளையில் தற்போது இந்த சீசனானது முதல் பாதி ஆட்டங்களை கடந்துள்ளது என்றே கூறலாம்.

போட்டிக்கு போட்டி பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் இந்தத்தொடரின் மத்தியில் பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் வேளையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன்சிங் இந்த ஐபிஎல் தொடரில் மோதும் இரு அணிகள் இந்தியா பாகிஸ்தான் போன்று பலமாக போட்டியை தரும் அணிகளாக ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் அணிகளாக இருக்கின்றன என்று தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில் :

cskvsmi

ஐபிஎல் தொடரில் எப்போதுமே சென்னை மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகள் மிகப் பெரும் பலம் வாய்ந்த அணிகளாக பார்க்கப்படுகின்றன. இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடைபெற்றாலும் சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெற்றால் எந்த அளவிற்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்குமோ அதே போன்று சென்னை மற்றும் மும்பை அணி விளையாடினால் அந்த உணர்வு தோன்றுவதாக கூறியுள்ளார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : நான் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடி இருக்கிறேன். சென்னை அணிக்காகவும் விளையாடி இருக்கிறேன். இரண்டு அணிகளுமே எனக்கு முக்கியமான அணிகள் தான். நான் மும்பை அணியில் இருந்து வெளியே வந்த பிறகு சென்னை அணியில் இணைந்து விளையாடினேன்.

இதையும் படிங்க : நான் கிரிக்கெட் விளையாடுவேன்னு நெனச்சி கூட பாத்ததில்லை – சி.எஸ்.கே இளம்வீரர் நெகிழ்ச்சி

இரண்டு அணிகளுமே பிரஷர் இருக்கும் அணிகள் தான். ஆனால் இப்போதும் ஐ.பி.எல் வரலாற்றில் மிகப்பெரிய இரண்டு ஜாம்பவான் அணிகள் என்றால் அது மும்பை மற்றும் சென்னை அணிகள் தான் என ஹர்பஜன் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement