நான் கிரிக்கெட் விளையாடுவேன்னு நெனச்சி கூட பாத்ததில்லை – சி.எஸ்.கே இளம்வீரர் நெகிழ்ச்சி

Mukesh
- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரின் மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ஜடேஜா பீல்டிங்கை தேர்வு செய்ய மும்பை அணியானது முதலில் விளையாடியது. இந்தப் போட்டியின் முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் ரோகித் சர்மாவை டக் அவுட் ஆக்கி வெளியேற்றிய முகேஷ் சவுத்ரி அந்த ஓவரின் 5-வது பந்தில் இஷான் கிஷனையும் ஆட்டமிழக்க வைத்து வெளியேற்றினார்.

Rohit Sharma MS Dhoni

- Advertisement -

இதன் காரணமாக முதல் ஓவர் முடிவதற்குள்ளேயே 2 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. பின்னர் பேபி ஏபிடி என்று அழைக்கப்படும் டேவால் பிரேவிஸ்-யும் தனது இரண்டாவது ஓவரின் கடைசி பந்தில் முகேஷ் சவுத்ரி ஆட்டமிழக்க வைத்து வெளியேற்றினார். இந்த ஆண்டு தீபக் சாகர் அணியில் இல்லாததன் காரணமாக வாய்ப்பினைப் பெற்ற முகேஷ் சவுத்ரி இப்படி பவர்பிளே ஓவர்களிலேயே தொடர்ந்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியது சென்னை நிர்வாகத்தை மட்டுமின்றி ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தது.

இந்த போட்டியில் மொத்தம் மூன்று ஓவர்களை வீசிய முகேஷ் சவுத்ரி 19 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அவரது இந்த அசத்தலான பந்து வீச்சு காரணமாக மும்பை அணி 20 ஓவர்களில் 155 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தது. பின்னர் 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணியானது கடைசி பந்தில் பவுண்டரி அடித்து ஆட்டத்தை முடிவு செய்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மும்பை அணியை வீழ்த்தியதன் மூலம் இதுவரை நடைபெற்ற 7 போட்டிகளில் இரண்டு வெற்றிகளை பெற்று 4 புள்ளிகளுடன் சென்னை அணி தற்போது ஒரு சுமாரான மதிப்பினை பெற்றுள்ளது.

MI vs CSK 2

இந்நிலையில் இந்த போட்டியில் சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்த முகேஷ் சவுத்ரி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய அவர் கூறுகையில் : நான் கிரிக்கெட் விளையாடுவேன் என்று எப்பொழுதும் நினைத்துக் கூட பார்த்தது கிடையாது. நான் பள்ளிப் படிப்பினை படிக்கும்போது எனக்கு அந்த அளவிற்கு கிரிக்கெட் மீது ஈடுபாடு கிடையாது.

- Advertisement -

ஆனாலும் ஸ்போர்ட்ஸ் பீரியட்ஸ்ஸில் அனைத்துவகையான விளையாட்டுகளையும் நான் விளையாடுவேன். கிரிக்கெட் விளையாடுவது என்பது பள்ளிப் பருவத்திலிருந்தே நான் முயற்சி செய்த ஒன்றுதான். ஆனால் தற்போது முழுநேர கிரிக்கெட் வீரராக மாறி நான் விளையாடுவதை மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். அதிலும் குறிப்பாக சென்னை அணிக்காக பவர் பிளே ஓவர்களில் நான் பந்து வீசுவதை மிகவும் பாக்கியமாக கருதுகிறேன்.

இதையும் படிங்க : ஜடேஜா தலைவணங்கியதை எல்லாரும் பாத்திருப்பீங்க. தோனியை பாத்து ராயுடு என்ன பண்ணாரு தெரியுமா? – விவரம் இதோ

இந்த போட்டியில் அற்புதமாக பந்து வீசிய நான் சென்னை அணிக்காக வெற்றியில் எனது பங்களிப்பை வழங்கியதில் மிகவும் மகிழ்ச்சி. பெரிய பெரிய வீரர்கள் என்னை சுற்றி இருப்பதனால் என் மீது உள்ள அழுத்தத்தை அவர்கள் சுமந்து செல்கின்றனர். இதன் காரணமாகவே என்னால் சிறப்பாக பந்து வீச முடிகிறது என முகேஷ் சவுத்ரி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement