டி20 உ.கோ விட அந்த தொடருக்கு வீரர்களை தேர்வு செய்யறது தான் ரொம்ப கஷ்டம் – வி.வி.எஸ் லக்ஷ்மணன்

Laxman
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான முதன்மை வீரர்களைக் கொண்ட இந்திய அணியானது ஆஸ்திரேலியாலில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் தற்போது முன்கூட்டியே ஆஸ்திரேலியாவுக்கு பயணித்து பயிற்சி போட்டியில் பங்கேற்று விளையாடி வருகிறது. அதே வேளையில் தற்போது ஷிகார் தவான் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியானது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இந்திய மண்ணில் நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

INDvsRSA

- Advertisement -

இப்படி ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு அணிகளுடன் விளையாடும் அளவிற்கு சர்வதேச அளவில் தரமான வீரர்களை இந்திய அணி பெற்றிருருக்கிறது. அந்த வகையில் இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் தற்காலிக பயிற்சியாளராக வி.வி.எஸ் லக்ஷ்மணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் வி.வி.எஸ் லட்சுமணன் அடுத்ததாக எதிர் வர இருக்கும் 2023 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான உலக கோப்பை தொடர் குறித்த தனது கருத்தினை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : இந்திய அணியில் தற்போது ஏகப்பட்ட திறமையான வீரர்கள் இருக்கின்றனர்.

IND vs SA Rishabh Pant Quiton De Kock Rohit Sharma

அவர்களுக்குள்ளே இருக்கும் போட்டியை பார்க்கும்போது ஆரோக்கியமான போட்டியாகவே அது தெரிகிறது. அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் இந்த ஒருநாள் போட்டிகளுக்கான உலகக் கோப்பை தொடருக்கான அணியை தேர்வு செய்வது தேர்வாளர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

- Advertisement -

ஏனெனில் சீனியர் வீரர்களுக்கு இணையாக தற்போது இளம் வீரர்களும் தங்களது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அணியில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்? யாருக்கு வாய்ப்பு கிடைக்காது? என்று தெரியாது.

இதையும் படிங்க : ஊக்கமருந்து விதிமீறல் : வெஸ்ட் இண்டீஸ் வீரருக்கு 4 ஆண்டுகள் தடை விதித்து அதிரடி – காட்டிய நிர்வாகம்

சீனியர் வீரர்கள் அணிக்கு திரும்பி விட்டால் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்காது என்கிற எதார்த்தத்தை உணரும் இளம் வீரர்களும் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை அற்புதமாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே எதிர்வரும் ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான அணி தேர்வு மிக மிக கடினமாக இருக்கும் என லக்ஷ்மணன் வெளிப்படையாக கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement