ஊக்கமருந்து விதிமீறல் : வெஸ்ட் இண்டீஸ் வீரருக்கு 4 ஆண்டுகள் தடை விதித்து அதிரடி – காட்டிய நிர்வாகம்

Campbell
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் வரையறுக்கப்பட்ட சில விதிமுறைகளை மீறும் வீரர்கள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தடை செய்யப்பட்டு வருவதை நாம் பலமுறை கேள்விப்பட்டுள்ளோம். அதனை கண்கூடாக பார்த்தும் வருகிறோம். அந்த வகையில் தற்போது மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த துவக்க வீரர் ஜான் கேம்பல் மீது ஒரு குற்றச்சாட்டு எழுந்து அது நிரூபிக்கவும் பட்டதால் நான்கு ஆண்டுகள் அவர் கிரிக்கெட் விளையாட தடை செய்யப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Campbell 2

- Advertisement -

அந்த வகையில் மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த துவக்க வீரரான ஜான் கேம்பல் ஊக்க மருந்து பயன்படுத்தியதாக அண்மையில் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அடுத்து அவர் மீது இருக்கும் இந்த குற்றச்சாட்டை விசாரிக்க மூன்று பேர் கொண்ட தனிக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

கடந்த ஏப்ரல் மாதம் அவரது சொந்த ஊரான கிங்ஸ்டனில் அவரது வீட்டில் இருந்தபோது ஊக்க மருந்து எதிர்ப்பு சோதனைக்கு வரச் சொல்லி அவரது ரத்த மாதிரியையும் வழங்குமாறு அந்த விசாரணை குழு அவரை அழைத்தது. ஆனால் அதற்கு ஜான் கேம்பல் மறுப்பு தெரிவித்ததாக ஜமைக்கா ஊக்க மருந்து எதிர்ப்பு ஆணையத்தின் அறிக்கை தெரிவித்தது.

Campbell 1

பின்னர் ஊக்க மருந்து சோதனைக்கு உட்படாத 29 வயதான ஜான் கேம்பல் ஜமைக்கா ஊக்க மருந்து எதிர்ப்பு ஆணையத்தின் படி அந்த விதியை மீறியதற்காக நான்கு ஆண்டுகள் தடை செய்யப்படுகிறார் என அதிகாரவப்பூர்வமாக அறிவித்தது. இது தொடர்பாக விசாரணை குழு அளித்த 18 பக்கங்கள் கொண்ட முடிவை பரிசீலித்த நிர்வாகமும் அவர் ஊக்க மருந்து விதிமுறையை மீறியதாக அறிக்கையில் குறிப்பிட்டது.

- Advertisement -

இதனால் அவரது நான்கு ஆண்டுகள் தண்டனையை நிர்வாகமும் உறுதி செய்துள்ளது. அதன்படி கடந்த மே மாதம் பத்தாம் தேதி முதல் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு அவர் எந்த ஒரு போட்டியிலும் பங்கு பெற முடியாது என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : டி20 உலககோப்பை : சாம்பியன் பட்டம் வெல்ல இந்த 3 அணிகளுக்கு தான் அதிக வாய்ப்பு – பிரெட் லீ கணிப்பு

கிங்ஸ்டனில் பிறந்து வளர்ந்த ஜான் கேம்பல் கடந்த 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இதுவரை 20 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 888 ரன்களை குவித்துள்ளார். அதேபோன்று 6 ஒரு நாள் போட்டிகளிலும், இரண்டு டி20 போட்டியிலும் அவர் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement