டி20 உலககோப்பை : சாம்பியன் பட்டம் வெல்ல இந்த 3 அணிகளுக்கு தான் அதிக வாய்ப்பு – பிரெட் லீ கணிப்பு

Lee
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் இன்னும் சில தினங்களில் டி20 உலக கோப்பை தொடரானது துவங்க உள்ளது. வரும் அக்டோபர் 16-ஆம் தேதி துவங்கும் இந்த தொடரானது நவம்பர் 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இந்த உலகக் கோப்பை தொடரில் கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போவது யார் என்பது குறித்து எதிர்பார்ப்பு தற்போதே ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

ICC T20 World Cup

- Advertisement -

அதோடு இந்த டி20 உலக கோப்பை தொடர் குறித்த பல்வேறு கருத்துக்களை பல்வேறு முன்னாள் வீரர்களும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் அண்மையில் இந்தியாவில் நடைபெற்று வரும் லெஜென்ட்ஸ் லீக் தொடரில் பங்கேற்ற ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரெட் லீ இந்த டி20 தொடர் குறித்த தனது கருத்தினை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

அண்மையில் இந்தியா வந்து லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடிய பிரட் லீ தற்போது சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அவர். அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார்.

INDvsAUS

அந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட பிரட் லீ இந்த டி20 உலக கோப்பை தொடரில் கோப்பையை வெல்லப்போகும் அணி எது என்பது குறித்த தனது கருத்தினை அளித்தார். அதன்படி அவர் கூறுகையில் : இந்த டி20 உலக கோப்பையை வெல்வதற்கு இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளுக்கு அதிக வாய்ப்புள்ளதாக நான் கருதுகிறேன்.

- Advertisement -

உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களை இந்தியா வெல்ல வேண்டும் என்றால் பும்ரா போன்ற வீரர் இந்திய அணிக்கு நிச்சயம் தேவை. காயம் காரணமாக அவர் இந்த தொடரில் இருந்து விலகி உள்ளதால் அவருக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங், புவனேஸ்வர் குமார் போன்ற பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். அவர்கள் இருவருமே சிறப்பான பந்துவீச்சாளர்கள் தான்.

இதையும் படிங்க : IND vs SA : வாழ்வா – சாவா போட்டியில் வெல்லுமா இந்தியா, ராஞ்சி மைதானம் எப்படி, புள்ளிவிவரங்கள் – பிட்ச், வெதர் ரிப்போர்ட்

நிச்சயம் அவர்களால் இந்திய அணிக்கு உதவ முடியும் என்று தெரிவித்துள்ளார். மேலும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு தற்போது லெஜெண்ட்ஸ் லீக் தொடரில் 65 ஆயிரம் ரசிகர்களுக்கு முன்னர் விளையாடியது மிகவும் மகிழ்ச்சி என பிரெட் லீ கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement