இந்திய அணி தொடர்ந்து செய்யும் ஒரே தவறு இதுதான். அதை மாற்றினா தான் ஜெயிக்க முடியும் – லக்ஷ்மனன் பேட்டி

Laxman
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான தொடர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் முடிவுக்கு வந்தது. அதனை தொடர்ந்து அடுத்ததாக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் என தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக அடுத்தடுத்து பெரிய தொடர் நடைபெற உள்ளதால் அந்த தொடருக்கான இந்திய அணியின் வீரர்களின் பட்டியல் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Dekock

- Advertisement -

இந்நிலையில் இந்த தென்ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் இந்திய அணியில் உள்ள ஒரு குறையை நிவர்த்தி செய்தாக வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான லட்சுமணன் தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

இந்திய அணியில் தற்போது உள்ள வீரர்கள் அனைவருமே பலமான வீரர்களாக தான் இருக்கிறார்கள். ஆனாலும் இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்டிங்கில் சற்று குறை உள்ளதாக தெரிகிறது. அதன்படி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தொடக்கத்தில் நிதானமாக விளையாடி செட்டானாலும் அதனை பெரிய ஸ்கோராக எடுத்துச் செல்லாமல் ஆட்டம் இழந்து வெளியேறுகின்றனர்.

gill

உதாரணத்திற்கு நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரின் போது செட்டிலாகி இருந்த சில வீரர்கள் அதனை பெரிய ரன்களாக மாற்ற முடியாமல் வெளியேறினர். தென்னாப்பிரிக்க மைதானத்தில் விளையாடும் போது டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் செட்டாகி பெரிய ரன் குவிப்புக்கு சென்றால் தான் அவர்களை வீழ்த்த முடியும். எனவே ஒருமுறை பேட்ஸ்மென் செட் ஆகிவிட்டால் அதனை அப்படியே பெரிய ஸ்கோர்-க்கு கண்டிப்பாக செல்லவேண்டும் என லட்சுமணன் அறிவுரை வழங்கியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்திய அணியில் இருந்து அவங்க 2 பேர் வாழ்த்து சொன்னதை மறக்கவே மாட்டேன் – அஜாஸ் படேல் பேட்டி

மேலும் தென் ஆப்பிரிக்க மைதானத்தில் பேட்டிங் செய்வது எளிதாக இருக்காது என்றும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் நல்ல பந்துகளுக்கு மரியாதை கொடுத்து விளையாட வேண்டும் எனவும் லட்சுமணன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement