இந்திய அணியில் இருந்து அவங்க 2 பேர் வாழ்த்து சொன்னதை மறக்கவே மாட்டேன் – அஜாஸ் படேல் பேட்டி

ajaz-3
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஜாஸ் படேல் முதல் இன்னிங்சின் போது இந்திய அணியின் அனைத்து வீரர்களும் ஆட்டமிழக்கச் செய்து 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். சர்வதேச கிரிக்கெட்டில் ஜிம் லேக்கர் மற்றும் அனில் கும்ப்ளே ஆகிய இருவர் மட்டுமே படைத்திருந்த இந்த சாதனையை அஜாஸ் படேல் போட்டியின் மூலம் படைத்தார்.

Ajaz

- Advertisement -

இந்த சாதனைக்காக அவருக்கு உலகமெங்கிலும் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் தான் செய்த இந்த சாதனை குறித்து பேசிய அஜாஸ் படேல் கூறுகையில் : நான் பத்து விக்கெட் எடுத்து எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டின் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட் வீழ்த்துவது என்பது மிகப்பெரிய சாதனை.

பெரிய, பெரிய ஜாம்பவான்கள் உடன் எனது பெயரும் அந்தப் பட்டியலில் இணைந்தது மகிழ்ச்சி. அதுவும் நான் பிறந்த மும்பையிலேயே இந்த சாதனை நடந்தது எனக்கு மிகவும் சந்தோஷம் என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : நான் இதுபோன்ற ஒரு சாதனையை மும்பை மைதானத்தில் செய்வேன் என்று நினைத்து பார்த்ததே கிடையாது.

Ajaz-5

மும்பை மைதானத்தில் விளையாட வேண்டும் என்று நினைத்தேனே தவிர இந்த சாதனை நடக்கும் என்று நான் ஒருபோதும் யோசித்தது கிடையாது. உண்மையை சொல்ல வேண்டுமெனில் நான் 9 விக்கெட் எடுத்த பின்னர் பத்தாவது விக்கெட்டை எடுக்க முடியும் என்று நினைத்து பந்துவீச்சின். அந்த வகையில் எனக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைத்தது மிகவும் ஹாப்பி.

- Advertisement -

இதையும் படிங்க : தென்னாப்பிரிக்க தொடரில் இந்த 4 வீரர்கள் இடம்பெறுவது சந்தேகமாம் – காரணம் இதுதான் (லிஸ்ட் இதோ)

இந்த போட்டி முடிந்து எங்களது ஓய்வறை வரை வந்து இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் விராட் கோலி ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அவர்கள் இருவரது வாழ்த்தையும் நான் மறக்கவே மாட்டேன். அவர்கள் இருவரும் அளித்த ஊக்கம் என்னை இனியும் சிறப்பாக செயல்பட வைக்கும் என்று அஜாஸ் படேல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement