தென்னாப்பிரிக்க தொடரில் இந்த 4 வீரர்கள் இடம்பெறுவது சந்தேகமாம் – காரணம் இதுதான் (லிஸ்ட் இதோ)

INDvsRSA
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தற்போது நடைபெற்று முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு தொடரையும் கைப்பற்றியது. அடுத்ததாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக மூன்று டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் கலந்துகொண்டு நாடு திரும்பிய சீனியர் வீரர்களுக்கு நியூசிலாந்து அணிக்கெதிரான தொடரின் போது ஓய்வு அளிக்கப்பட்டது. அதனால் தற்போது மீண்டும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் அவர்கள் அணிக்கு திரும்ப இருக்கின்றனர்.

IND

அந்த வகையில் ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், ஷமி, பும்ரா ஆகியோர் இந்த தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கு மீண்டும் அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த தென்னாப்பிரிக்க தொடரில் 4 வீரர்கள் காயம் காரணமாக பங்கேற்பதில் சிக்கலை சந்தித்துள்ளனர்.

- Advertisement -

அதன்படி இந்திய அணியின் முக்கிய வீரர்களாக பார்க்கப்படும் அக்ஷர் பட்டேல், ரவீந்திர ஜடேஜா, சுப்மன் கில், இஷாந்த் சர்மா ஆகிய நால்வரும் காயத்தினால் அவதிப்பட்டு வருவதாகவும், அவர்கள் உடற்தகுதி தற்போதைக்கு விளையாடும் அளவிற்கு தயாராகவில்லை என்பதால் தென் ஆப்ரிக்க தொடரில் இடம் பெறுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தொடருக்கு முன்னர் இவர்கள் நால்வருது உடற்தகுதியும் பரிசோதிக்கப்பட்டு அதன்படியே முடிவுகள் மேற்கொள்ளப்படும் என்று தெரியவந்துள்ளது.

ind 1

தென்னாப்பிரிக்க நாட்டில் உள்ள மைதானங்கள் அனைத்தும் வேகப்பந்து வீச்சுக்கு அதிகம் சாதகமாக இருக்கும் என்பதனால் சுழற்பந்து வீச்சாளராக இரண்டு வீரர்கள் மட்டும் இருந்தால் போதும் என்று இந்திய அணி நிர்வாகம் யோசிக்கிறது. ஏற்கனவே அஷ்வின் நல்ல பார்மில் இருப்பதால் அவருடன் மேலும் ஒரு சுழற்பந்து வீச்சாளர் இணைத்தால் போதும் என்ற முடிவில் உள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : இந்திய அணியில் என்ன நடக்குதுன்னே தெரியல. இவருக்கு ஏன் வாய்ப்பு தரல – தினேஷ் கார்த்திக் ஆதங்கம்

அதோடு வேகப்பந்து வீச்சை பொறுத்தவரை பும்ரா, ஷமி, சிராஜ், உமேஷ் யாதவ் போன்றோருடன் பேக்கப் வீரர்களாக இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்யும் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement