இந்திய அணியில் என்ன நடக்குதுன்னே தெரியல. இவருக்கு ஏன் வாய்ப்பு தரல – தினேஷ் கார்த்திக் ஆதங்கம்

karthik
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடருக்கான வீரர்களின் தேர்வின் போதே ஏகப்பட்ட சர்ச்சை நிலவியது. ஏனெனில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுத்தது, அதுமட்டுமின்றி மிடில் ஆர்டரில் விகாரியை சேர்க்காதது என பல விடயங்கள் விமர்சனத்தை எழுப்பின. அதுமட்டுமின்றி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் விஹாரி டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம்பெறாத போதே அது குறித்த விமர்சனங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகளவு எழத் துவங்கின. அப்போது உடனடியாக அவர் இந்தியா ஏ அணியில் சேர்க்கப்பட்டு தென்னாபிரிக்க தொடருக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

Vihari

- Advertisement -

ஆனால் கடைசியாக விஹாரி ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடிய இன்னிங்ஸ் ஒரு அற்புதமான இன்னிங்ஸ் என்றும் அவரை அணியில் ஏன் சேர்க்கவில்லை ? என்றும் பல கேள்விகள் விஹாரியை சுற்றி தொடர்ந்து கொண்டே இருந்தன. இந்நிலையில் அதற்கடுத்து தற்போது வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றிய பிறகு தற்போது தென் ஆப்பிரிக்க தொடருக்காக தயாராகி வருகிறது.

இந்நிலையில் இந்திய அணியில் விஹாரியின் இடம் குறித்து பேசியுள்ள தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் கூறுகையில் : இந்திய அணியில் தற்போது ராகுல், ரோஹித், மாயங்க் அகர்வால் என மூன்று துவக்க வீரர்கள் உள்ளனர். அவர்களை தொடர்ந்து புஜாரா, விராட் கோலி, ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், சுப்மன் கில் என ஏகப்பட்ட பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர். இருப்பினும் என்னைப் பொறுத்தவரை விஹாரிக்கு என்ன நடந்தது ? என்று எனக்கு தெரியவில்லை. அவர் நிச்சயம் இந்திய அணியில் இடம் பெற்றிருக்க வேண்டிய ஒரு தகுதியான வீரர்.

Vihari-1

ஆனால் அவர் இந்தியா ஏ அணியுடன் தென் ஆப்பிரிக்கா அனுப்பப்பட்டது எனக்கு வருத்தமாக இருந்தது. அவரை ஏன் அணியில் எடுக்கவில்லை என்றே தோன்றுகிறது. ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது விளையாடும் வீரர்கள் 30-40 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறும் நிலையில் அவர்களை விட விஹாரியின் ஆட்டம் சிறப்பாகவே உள்ளது. கடினமான மைதானத்திலும் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிக கச்சிதமாக பொருந்தி தனது ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் சிறப்பாக செயல்பட்டும் அணியில் இடம்பெறாதது சற்று வருத்தம் என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : கபில் தேவின் சாதனையை வெகுவிரைவாக முறியடிக்கவுள்ள தமிழக வீரர் அஷ்வின் – வேறலெவல் சம்பவம்

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : தற்போது உள்ள சூழலில் இந்திய அணியில் ரஹானேவின் இடம் தற்போது மிகப்பெரிய சிக்கலில் உள்ளது. இருப்பினும் டிராவிட் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிப்பார் என்று தோன்றுகிறது. மேலும் புஜாராவின் நிலைமையும் அதுதான் என்னை பொறுத்தவரை தென்னாப்பிரிக்க தொடருக்கான அணியில் விஹாரி இடம் பெறுவது சந்தேகம்தான் ஆனால் அவர் இந்திய அணியில் இருக்க அவர் தகுதியானவர் என்று தினேஷ் கார்த்திக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement