கபில் தேவின் சாதனையை வெகுவிரைவாக முறியடிக்கவுள்ள தமிழக வீரர் அஷ்வின் – வேறலெவல் சம்பவம்

kapil dev
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஷ்வின் நடைபெற்று முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகளில் விளையாடிய அவர் 14 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இந்த தொடரில் அவர் எடுத்த இந்த 14 விக்கெட்டில் மூலம் அஷ்வின் ஹர்பஜன் சிங்கின் அதிக விக்கெட்டுகள் சாதனையை கடந்து மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். அதுமட்டுமின்றி அஷ்வின் சொந்த மண்ணில் 300 விக்கெட்டை வீழ்த்தியது, ஒரு ஆண்டில் அதிக முறை 50 விக்கெட் எடுத்தது போன்ற பல சாதனைகளைப் படைத்தார்.

ashwin 1

- Advertisement -

மேலும் நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரின் தொடர் நாயகன் விருதை பெற்ற அவர் 9-வது முறையாக தொடர் நாயகன் விருதினை பெற்று அசத்தினார். இப்படி தொடர்ந்து அடுக்கடுக்காக பல சாதனைகளை செய்து வரும் அஷ்வின் அடுத்ததாக கபில் தேவின் மிகப்பெரிய சாதனை ஒன்றையும் வெகுவிரைவாக முறியடிக்க காத்திருக்கிறார்.

அதன்படி இதுவரை இந்திய அணிக்காக 81 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 427 விக்கெட்களுடன் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இந்தியர் பவுலர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் அனில் கும்ப்ளே 619 விக்கெட்டுகளுடன் முதல் இடத்திலும், கபில்தேவ் 434 விக்கெட்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

kapil dev 1

கபில்தேவ் 131 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 434 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்நிலையில் அவரது இந்த சாதனையை தகர்க்க அஷ்வினுக்கு இன்னும் 8 விக்கெட்டுகள் மட்டும் தான் தேவை. அதுவும் 81 போட்டிகளிலேயே 427 விக்கெட்டுகளை எடுத்துள்ளதால் வெகுவிரைவாக கபில் தேவின் சாதனையை முறியடிக்க அவருக்கு பிரமாதமான வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : வீடியோ : சர்வதேச கிரிக்கெட்டில் முதல்முறையாக பந்துவீசிய பாபர் அசாம் – வைரலாகும் வீடியோ

மேலும் தற்போது கபில்தேவை விட 50 டெஸ்ட் போட்டிகள் குறைவாக விளையாடி உள்ளதால் மிகப் பெரிய வித்தியாசத்தில் கபில்தேவ் சாதனையை அஷ்வின் முறியடிப்பார். அதுமட்டுமின்றி அவர் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் பட்சத்தில் நிச்சயம் 550 விக்கெட்டுகளை நெருங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement