சர்வதேச கிரிக்கெட்டில் முதல்முறையாக பந்துவீசிய பாபர் அசாம்

babar
- Advertisement -

27 வயதான பாகிஸ்தான் அணியின் கேப்டனும், முன்னணி பேட்ஸ்மேனுமான பாபர் அசாம் கடந்த 2015ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக 36 டெஸ்ட் போட்டிகள், 83 ஒருநாள் போட்டிகள் மற்றும் 70 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தமாக 200 போட்டிகளை நெருங்கியிருக்கும் பாபர் அசாம் தனது சிறப்பான பேட்டிங் மூலமாக விராட் கோலி, ஜோ ரூட், வில்லியம்சன் ஆகியோரது பட்டியலில் தனது பெயரையும் பதித்துள்ளார்.

ஆனால் இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை பௌலிங் செய்தது கிடையாது. இந்நிலையில் தற்போது பங்களாதேஷில் நடைபெற்று வரும் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி தற்போது மீர்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதல் முறையாக பாபர் அசாம் பந்துவீசினார்.

- Advertisement -

இதுவே அவர் சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறையாக பந்து வீசுவது என்பது குறிப்பிடத்தக்கது. பங்களாதேஷ் அணி 75 ரன்களுக்கு 7 விக்கெட்டை இழந்திருந்த போது வலதுகையை ஆஃப் ஸ்பின்னரான அவர் நேற்றைய போட்டியில் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக சற்று சிறப்பாக பந்து வீசினார் என்று கூறலாம்.

சர்வதேச கிரிக்கெட்டில் பேட்டிங்கில் அசத்தி வரும் அவரது இந்த பவுலிங் பலரையும் சர்ப்ரைஸ் செய்துள்ளது. மேலும் அது குறித்த இந்த வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. மிகச்சிறப்பான பேட்ஸ்மேன்கள் இவ்வாறு சர்ப்ரைஸாக பந்துவீசுவதும் ரசிகர்களுக்கு ஒரு அலாதியான இன்பத்தை தரும் என்றே கூறலாம்.

Advertisement