ராகுல் டிராவிட் இல்ல, 2023 ஏசியன் கேம்ஸ் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் இவர் தான் – வெளியான தகவல் இதோ

Ruturaj Gaikwad
- Advertisement -

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் 2023 ஐசிசி உலக கோப்பையை சொந்த மண்ணில் வென்று சரித்திரம் படைப்பதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இறுதிக்கட்டமாக தயாராகி வருகிறது. அதற்கு முன்பாக ஆகஸ்டு 30ஆம் தேதி துவங்கும் 2023 ஆசியக் கோப்பையில் பங்கேற்பதற்காக தற்போது பெங்களூருவில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலைமையில் வரும் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் சீனாவில் நடைபெறும் 2023 ஆசிய விளையாட்டு போட்டிகளில் 2014க்குப்பின் முதல் முறையாக டி20 வடிவமாக கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது.

ஆனால் அந்த சமயத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் ஒருநாள் தொடரில் பங்கேற்கும் ரோகித் சர்மா தலைமையிலான முதன்மை இந்திய அணி அப்படியே 2023 உலகக் கோப்பையில் களமிறங்குவதற்காக பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதன் காரணமாக இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ருதுராஜ் கைக்வாட் தலைமையில் விளையாடுவதற்கு முழுவதுமாக இளம் இந்திய அணி கடந்த மாதமே அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

பயிற்சியாளர்கள் அறிவிப்பு:
இந்நிலையில் யசஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங் போன்ற முழுவதுமாக இளம் வீரர்களுடன் களமிறங்கும் அந்த அணிக்கு நட்சத்திர முன்னாள் இந்திய வீரர் மற்றும் எம்சிஏ இயக்குனராக இருக்கும் விவிஎஸ் லக்ஷ்மன் பயிற்சியாளராக செயல்படுவார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. குறிப்பாக தற்போது முதன்மை பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட் உலகக் கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு உதவியாக இருப்பார் என்பதால் இத்தொடருக்காக சீனாவுக்கு செல்ல முடியாது.

அதனால் தற்காலிகமாக அந்த தொடரில் விவிஎஸ் லக்ஷ்மன் பயிற்சிளாக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சைராஜ் பஹதூளே பவுலிங் பயிற்சியாளராகவும் முனீஸ் பலி ஃபீல்டிங் பயிற்சியாளராகவும் ருதுராஜ் தலைமையிலான இளம் இந்திய அணிக்கு உதவி செய்வார்கள் என்று தெரிய வருகிறது. முன்னதாக கடந்த 2022 ஜூலை மாதம் இதே போல இங்கிலாந்து மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ரோகித் சர்மா தலைமையிலான முதன்மை அணிக்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக செயல்பட்ட நிலையில் அயர்லாந்தில் விளையாடிய ஹர்திக் பாண்டியா தலைமையிலான அணிக்கு விவிஎஸ் லக்ஷ்மண் பயிற்சியாளராக செயல்பட்டார்.

- Advertisement -

இருப்பினும் சமீபத்தில் நடைபெற்ற முடிந்த அயர்லாந்து டி20 தொடரில் விவிஎஸ் லக்ஷ்மண் இல்லாமல் ஜஸ்பிரித் பும்ரா தலைமையிலான இளம் அணி சிறப்பாக விளையாடி வெற்றி வாகை சூடியது. அந்த சமயத்தில் கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற முக்கிய வீரர்கள் காயத்திலிருந்து குணமடைந்து வந்ததால் அவர்களை கவனிப்பதற்காக பெங்களூருவில் இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட காரணத்தால் அயர்லாந்து தொடரில் லக்ஷ்மண் பயிற்சியாளராக செயல்படவில்லை.

இதையும் படிங்க:வீடியோ : யோயோ டெஸ்டுக்கு டஃப் கொடுக்கும் தல தோனியின் பிராக்டீஸ் – ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் பாராட்டு

ஆனால் இந்த ஆசிய விளையாட்டு போட்டிகளின் போது முதன்மையான அணி உலகக் கோப்பையில் விளையாடும் என்பதுடன் என்சிஏவில் பெரிய அளவில் கண்காணிப்பு வேலைகள் இருக்காது என்பதாலேயே லக்ஷ்மண் சீனாவுக்கு சென்று இளம் அணிக்கு பயிற்சியாளராக செயல்பட உள்ளார். மேலும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் களமிறங்கும் இந்திய மகளிர் அணிக்கு ரிஷிகேஷ் கனிட்கார் ரஜிப் துட்டா, சுபதீப் கோஸ் ஆகியோர் பயிற்சியாளராக செயல்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement