யோயோ டெஸ்டுக்கு டஃப் கொடுக்கும் தல தோனியின் பிராக்டீஸ் – ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் பாராட்டு

GYM Practice
- Advertisement -

நட்சத்திர முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி ஓய்வுக்கு பின் ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி விட்டு பெரும்பாலும் தன்னுடைய சொந்த ஊரான ராஞ்சியில் இருந்து வருகிறார். 2004 – 2019 வரையிலான காலகட்டங்களில் உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு அபாரமாக விளையாடிய அவர் கண்ணிமைக்கும் நேரத்தில் பேட்ஸ்மேன்கள் ஒரு இன்ச் காலை தூக்கினால் ஸ்டம்ப்பிங் செய்து விக்கெட் கீப்பிங் செய்வதில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தினார். அதே போல மிடில் ஆர்டரில் நங்கூரமாக நின்று நிறைய போட்டியில் வெற்றிகளை பெற்றுக் கொடுத்த மிகச்சிறந்த ஃபினிஷராக போற்றப்படும் அவர் 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து உலக கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் என்ற சரித்திரமும் படைத்துள்ளார்.

அந்த வகையில் பல இளம் வீரர்களுக்கு ரோல் மாடலாக திகழும் கடைசியாக 2019 உலகக்கோப்பையில் விளையாடி 2020 சுதந்திர தினத்தில் ஓய்வு பெற்ற அவர் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தொடர்ந்து விளையாடு வருகிறார். அதில் இந்த வருடம் ஆரம்பம் முதலே சிறப்பாக செயல்பட்ட சென்னை மாபெரும் ஃபைனலில் குஜராத்தை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து 5வது கோப்பையை வென்று வெற்றிகரமான அணி என்ற தம்முடைய பரம எதிரி மும்பையின் ஆல் டைம் சாதனையை சமன் செய்தது

- Advertisement -

அசத்தல் பயிற்சிகள்:
மேலும் அத்தொடரில் ஆரம்பம் முதலே முழங்கால் வலியுடன் விளையாடி வந்த அவர் 41 வயதிலும் அனைத்துப் போட்டிகளில் முழுமையாக விக்கெட் கீப்பிங் செய்து கடைசி நேரங்களில் களமிறங்கி பேட்டிங்கில் அதிரடியான சிக்சர்களை அடித்து ரசிகர்களை மகிழ்வித்தார். அந்தளவுக்கு தற்போது 42 வயதாகும் அவர் சிறந்த ஃபிட்னஸை கடைபிடித்து கட்டுமஸ்தான உடம்புடன் பல இளம் வீரர்களுக்கு டஃப் கொடுப்பவராகவே இருந்து வருகிறார்.

மேலும் முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் தற்போது அதிலிருந்து குணமடைந்து வரும் வேளைகளிலும் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக ராஞ்சியில் இருக்கும் உடற்பயிற்சி கூடத்தில் தம்முடைய நண்பர்களுடன் ஒன்றாக சேர்ந்து அவ்வப்போது லேசான பயிற்சிகளை செய்து வரும் தோனி சமீபத்தில் செய்த ஒரு பயிற்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக தரையில் படுத்து கட்டு நேரத்தில் கைகள் மற்றும் கால்களால் மட்டும் சிறிது நேரம் அப்படியே நின்று பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக எழுந்திருக்கும் அந்த பயிற்சியை தோனி கச்சிதமாக செய்தார்.

- Advertisement -

அதிலும் மற்றவர்களை உடனடியாக மேலே நிமிர்ந்த நிலையில் தோனி மிகவும் மெதுவாக எழுந்து கூலான பயிற்சிகளை மேற்கொண்டார். அந்த வீடியோவை பார்க்கும் ரசிகர்கள் இந்திய அணியில் மிகவும் கடினமான யோயோ டெஸ்டில் இப்போது பங்கேற்றால் கூட தோனி எளிதாக தேர்ச்சி பெற்று விடுவார் என்று சமூக வலைதளங்களில் பாராட்டுகின்றனர்.

இதையும் படிங்க:அவருக்காக ஒரு இடத்தை நாம உருவாக்க முடியாது. யாராவது இஞ்சுரி ஆனா வேனா அவரை சேக்கலாம் – ஆகாஷ் சோப்ரா கருத்து

இது மட்டுமல்லாமல் நாய்களுடன் பிறந்தநாளை கொண்டாடியது, பழைய மாடல் கார் மற்றும் பைக்குகளில் ராஞ்சி நகரில் வலம் வந்தது, ரசிகர்களிடம் வழி கேட்டது என சமீப காலங்களாகவே தோனி செய்யும் சிறிய சிறிய எளிமையான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement