அவருக்காக ஒரு இடத்தை நாம உருவாக்க முடியாது. யாராவது இஞ்சுரி ஆனா வேனா அவரை சேக்கலாம் – ஆகாஷ் சோப்ரா கருத்து

Aakash-Chopra-1
- Advertisement -

கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி திங்கட்கிழமை இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கரும், கேப்டன் ரோகித் சர்மாவும் இணைந்து ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியை அறிவித்தனர். அதில் ஒரு சில வீரர்களுக்கு இடம் கிடைக்காதது பலரது மத்தியிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த அணியில் இடம் பிடித்துள்ள ஒரு சில வீரர்கள் குறித்த தங்களது கருத்துக்களையும் முன்னாள் வீரர்கள் பலரும் பேசி வருகின்றனர்.

அந்த வகையில் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹலுக்கு இடம் கிடைக்காதது பலரது மத்தியிலும் பேசப்படும் விடயமாக மாறியது.

- Advertisement -

ஏனெனில் இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளராக பேட்டிங் தெரிந்த ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோருடன் குல்தீப் யாதவ் மட்டும் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா சாஹலுக்கு இந்திய அணியில் இடம் கொடுக்காத முடிவு சரிதான் என்றும் அவருக்கான ஒரு இடத்தை இந்திய அணியில் உருவாக்க முடியாது என்றும் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் : ஆசிய கோப்பை தொடரில் ஒரு ரிஸ்ட் ஸ்பின்னர் உடன் மட்டுமே நாம் செல்ல வேண்டி உள்ளது. அந்த வகையில் யுஸ்வேந்திர சாஹலுக்கு சற்று முன்னர் தான் குல்தீப் யாதவ் உள்ளார். சாஹலுக்காக நாம் ஒரு இடத்தை உலகக் கோப்பை அணியில் உருவாக்க முடியாது. ஏனெனில் தற்போது உள்ள அணியில் சரியான வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

- Advertisement -

ஒருவேளை யாராவது காயமடைந்தால் மட்டுமே அவரை சேர்க்க முடியும் என்று தனது கருத்தினை தெரிவித்துள்ளார். ஏற்கனவே ரோகித் சர்மா மற்றும் அகார்கர் ஆகியோர் ஆசிய கோப்பை தொடருக்கான அணியை வெளியிடும் போது நீண்ட ஆலோசனைகளுக்கு பிறகே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தற்போதைய அணியில் எந்தெந்த இடங்களுக்கு எந்தெந்த வீரர்கள் தேவையோ அதனை கருத்தில் கொண்டே அணித்தேர்வு அமைந்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க : தங்களுடைய கேரியரில் கடைசி வரை உலக கோப்பை வெல்லாமலேயே ஓய்வு பெற்ற 5 இந்திய ஜாம்பவான்கள் – லிஸ்ட் இதோ

இந்திய அணியில் பேட்டிங் தெரிந்த பவுலர்கள் பின்வரிசையில் வேண்டும் என்பதற்காக பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கும் வேளையில் யுஸ்வேந்திர சாஹலுக்கு இடம் கிடைக்காதது பலவிதத்திலும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement