தங்களுடைய கேரியரில் கடைசி வரை உலக கோப்பை வெல்லாமலேயே ஓய்வு பெற்ற 5 இந்திய ஜாம்பவான்கள் – லிஸ்ட் இதோ

- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகலமாக துவங்கி நவம்பர் 19 வரை நடைபெற உள்ளது. அதில் சாம்பியன் பட்டம் வென்று சரித்திரம் படைப்பதற்காக வரும் உலக அணிகளுக்கு சவாலை கொடுத்து சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா 2011 போல கோப்பையை வென்று கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தோல்விகளை நிறுத்தும் முனைப்புடன் களமிறங்குகிறது.

முன்னதாக கிரிக்கெட்டில் விளையாடும் அனைத்து வீரர்களுக்கும் தங்களுடைய நாட்டுக்காக உலகக் கோப்பையை வென்று சாம்பியனாக சாதனை படைக்க வேண்டும் என்பதே மிகப்பெரிய லட்சியமாக இருக்கும். இருப்பினும் சச்சின் டெண்டுல்கரே தம்முடைய கடைசி முயற்சியில் வெல்லும் அளவுக்கு மிகவும் கடினமான உலகக் கோப்பையை நாட்டுக்காக பல வருடங்கள் மிகச்சிறப்பாக விளையாடி ஏராளமான சாதனைகள் படைத்த சில மகத்தான இந்திய வீரர்களால் கடைசி வரை தொட முடியவில்லை. அவர்களைப் பற்றி பார்ப்போம்:

- Advertisement -

1. சௌரவ் கங்குலி: மகத்தான இடது கை பேட்ஸ்மேனாக போற்றப்படும் இவர் 2000ஆம் ஆண்டு சூதாட்ட புகாரில் சிக்கிய போது கேப்டனாக பொறுப்பேற்று இளம் வீரர்களை கண்டறிந்து ஆக்ரோசமாக கேப்டன்ஷிப் செய்து குறுகிய காலத்திலேயே இந்தியாவை வெற்றிகரமான அணியாக மாற்றினார். குறிப்பாக 2001 பார்டர் – கவாஸ்கர் கோப்பை, 2002 சாம்பியன்ஸ் ட்ராபி, நாட்வெஸ்ட் முத்தரப்பு தொடர்களை அவரது தலைமையில் வென்ற இந்தியா 2003 உலகக் கோப்பையிலும் அபாரமாக செயல்பட்ட போதிலும் ஃபைனலில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. அதனால் கோப்பையை வெல்ல முடியாத அவர் 2007 உலக கோப்பையிலும் சாம்பியன் பட்டம் வெல்ல முடியாமல் 2008இல் ஓய்வு பெற்றார்.

2. ராகுல் டிராவிட்: இந்திய கிரிக்கெட்டில் பெருஞ்சுவர் என்று போற்றப்படும் இவர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தலா 10000க்கும் மேற்பட்ட ரன்களை அடித்த போதிலும் 2003இல் உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தார். அதை விட 2007 உலக கோப்பையில் கேப்டனாக செயல்பட்ட அவருக்கு தேவையற்ற மாற்றங்களால் வரலாறு காணாத படுதோல்வியே பரிசாக கிடைத்தது. இருப்பினும் தற்போது அவர் பயிற்சியாளராக உலகக்கோப்பையை வெல்ல போராட உள்ளார்.

- Advertisement -

3. அனில் கும்ப்ளே: சர்வதேச அரங்கில் அதிக விக்கெட் எடுத்த இந்திய பவுலராகவும் மேட்ச் வினராகவும் சாதனை படைத்த இவரும் 4 உலகக் கோப்பையில் விளையாடினார். ஆனாலும் அதில் 2003ஆம் ஆண்டு ஃபைனல் வரை சென்ற இந்தியா தோற்றதால் இவராலும் கடைசி வரை கோப்பையை வெல்ல முடியவில்லை.

4. ஜவகல் ஸ்ரீநாத்: இந்தியாவின் நட்சத்திர ஜாம்பவான் வேகப்பந்து வீச்சாளராக போற்றப்படும் இவர் 1992, 1996, 1999, 2003 ஆகிய உலகக் கோப்பைகளில் விளையாடும் ஒன்றில் கூட சாம்பியன் பட்டம் வெல்ல முடியவில்லை. குறிப்பாக ஓய்விலிருந்து கம்பேக் கொடுத்து விளையாடிய 2003 உலக கோப்பையிலும் அவரால் ஃபைனல் வரை மட்டுமே செல்ல முடிந்தது.

இதையும் படிங்க:2023 உ.கோ : 2017 முதல் ஐசிசி தொடரில் தோல்வியை கொடுத்த காரணத்தை உடைக்க – ரோஹித் சர்மா போட்டுள்ள மாஸ் திட்டம்

5. முகமது அசாருதீன்: வரலாற்றிலேயே 1992, 1996, 1999 என இந்தியாவை 3 உலகக் கோப்பைகளில் வழி நடத்திய ஒரே கேப்டன் என்ற சாதனை படைத்த அவர் அதில் ஒன்றை கூட வெல்ல முடியவில்லை. குறிப்பாக மகத்தான பேட்ஸ்மேனாக இருந்தும் ஒருமுறை கூட அவரால் இந்திய அணியை ஃபைனலுக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement