2023 உ.கோ : 2017 முதல் ஐசிசி தொடரில் தோல்வியை கொடுத்த காரணத்தை உடைக்க – ரோஹித் சர்மா போட்டுள்ள மாஸ் திட்டம்

- Advertisement -

வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக இந்திய மண்ணில் நடைபெறும் 2023 ஐசிசி உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் கோலாகலமாக துவங்கி நவம்பர் 19 வரை பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. அதில் 2011 போல சொந்த மண்ணில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் கோப்பையை வென்று கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தலைகுனியும் தோல்விகளை நிறுத்தும் முனைப்புடன் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தயாராகி வருகிறது. அதன் இறுதிக்கட்டமாக உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் விரைவில் இலங்கையில் நடைபெறும் 2023 ஆசிய கோபையில் விளையாடுவதற்காக பெங்களூருவில் இருக்கும் என்சிஏவில் இந்திய கிரிக்கெட் அணியினர் வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அதில் அன்கித் சவுத்ரி என்ற உயரமான உள்ளூர் இடது கை வேகப்பந்து வீச்சாளரை வரவைத்து கேப்டன் ரோகித் சர்மா நீண்ட நேரம் ஸ்பெஷலான பயிற்சிகளில் ஈடுபட்டார். அதாவது பொதுவாகவே கிரிக்கெட்டில் இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் புதிய பந்தை சற்று அதிகமாக ஸ்விங் செய்து வலது கை பேட்ஸ்மேன்களுக்கு பெரிய சவாலை கொடுப்பார்கள். அதிலும் மேகமூட்டத்துடன் கூடிய சூழ்நிலையின் நிலவினால் எப்பேர்பட்ட தரமான பேட்ஸ்மேனாக இருந்தாலும் பெட்டிப் பாம்பாக அடங்க வேண்டிய நிலைமை ஏற்படும்.

- Advertisement -

ரோஹித்தின் திட்டம்:
அந்த வகையில் 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் முகமத் அமீரின் ஸ்விங் பந்துகளுக்கு தாக்குப் பிடிக்க முடியாத ரோகித் சர்மா சொற்ப ரன்களில் அவுட்டானது இந்தியாவுக்கு படுதோல்வி பரிசளித்தது. அதே போல 2019 செமி ஃபைனலில் ட்ரெண்ட் போல்ட், மாட் ஹென்றி போன்ற நியூசிலாந்து பவுலர்களிடம் ரோகித் சர்மா, ராகுல், விராட் கோலி போன்றவர்கள் பெட்டி பாம்பாக அடங்கியதால் தோல்வி கிடைத்தது.

அதை விட 2021 டி20 உலக கோப்பையிலும் ஷாஹின் அப்ரிடியிடம் ரோஹித் சர்மா, ராகுல் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்னில் நடையை கட்டியது பரம எதிரி பாகிஸ்தானிடம் வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவுக்கு படுதோல்வியை பெற்றுக் கொடுத்தது. அத்துடன் கடந்த 2022 ஜூலை மாதம் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் அந்த அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லியிடம் மீண்டும் ரோகித் சர்மா அவுட்டானது நிறைய விமர்சனங்களை எழுப்பியது.

- Advertisement -

குறிப்பாக உலகக்கோப்பை போன்ற பெரிய தொடரை வெல்ல வேண்டுமெனில் முதலில் இந்திய பேட்ஸ்மேன்கள் இடது கை வேகப்பந்து வீச்சாளர்களை தரமாக எதிர்கொள்ள வேண்டுமென முன்னாள் வீரர் வாஷிங் ஜாஃபர் விமர்சித்தார். அதனாலேயே இந்த ஆசிய மற்றும் 2023 உலகக் கோப்பையில் ஷாஹின் அப்ரிடி, ட்ரெண்ட் போல்ட் போன்ற இடது கை வேகப்பந்து வீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொள்வதற்காக ரோகித் சர்மா இப்போதே பயிற்சிகளை தொடங்கியுள்ளார்.

இதையும் படிங்க:விராட் கோலியுடன் பாபர் அசாமை ஒப்பிடுவதா? இது எப்படி இருக்கு தெரியுமா? – சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து

அவரை போலவே விராட் கோலி மற்றும் சுப்மன் கில் போன்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் வலைப் பயிற்சியில் இடது கை பவுலர்களை அதிகமாக எதிர்கொண்டனர். இதை தொடர்ந்து செப்டம்பர் 2ஆம் தேதி இலங்கையின் கொழும்பு நகரில் பாகிஸ்தானை தன்னுடைய முதல் ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement