விராட் கோலியுடன் பாபர் அசாமை ஒப்பிடுவதா? இது எப்படி இருக்கு தெரியுமா? – சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து

Sanjay-Manjrekar
- Advertisement -

நவீன மாடர்ன் டே கிரிக்கெட்டில் இந்திய வீரரான விராட் கோலியுடன் அதிகம் ஒப்பிடப்பட்டு பேசப்பட்டு வீரராக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் திகழ்ந்து வருகிறார். இருவருமே தங்களது நாட்டு கிரிக்கெட் அணிகளுக்காக மிகப்பெரிய வீரர்களாக திகழ்ந்து வருகின்றனர். இதன் காரணமாக அவ்வப்போது பாபர் அசாம் மற்றும் விராட் கோலி இடையான ஒப்பீடுகளும் நடைபெற்று வருகிறது.

ஆனால் அப்படி விராட் கோலியுடன் பாபர் அசாமை தற்போதே ஒப்பிடுவது தவறு என இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்சரேக்கர் கூறியுள்ளார். மேலும் பாபர் அசாம் மற்றும் விராட் கோலி ஆகியோரது ஒப்பீடு குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்சரேக்கர் மற்றும் டாம் மூடி ஆகிய இருவருமே தங்களது வெளிப்படையான கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.

- Advertisement -

அந்த வகையில் சஞ்சய் மஞ்சரேக்கர் கூறுகையில் : இருவருமே மிகச் சிறப்பான வீரர்கள் தான் ஆனால் பாபரசம் விராட் கோலியை விட சற்று அனுபவம் குறைந்த வீரர். விராட் கோலிக்கு பல ஆண்டுகள் அனுபவம் இருக்கிறது. இதுவரை 275 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 57 ரன்கள் சராசரியுடன் 12,898 ரன்களை குவித்துள்ளார்.

அதே வேளையில் 108 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ள பாபர் அசாம் 58 ரன்கள் சராசரியுடன் 5142 ரன்களை மட்டுமே குவித்துள்ளார். எனவே தற்போதே பாபர் அசாமை விராட் கோலியுடன் ஒப்பிடுவது எனக்கு சரியானதாக தோன்றவில்லை.

- Advertisement -

விராட் கோலி சேஸிங் மாஸ்டர் என்பதை காலம் காலமாக நிரூபித்து வருகிறார் என சஞ்சய் மஞ்சரேக்கர் கூறியது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று இவர்கள் இருவரது ஒப்பீடு குறித்து பேசிய டாம் மூடி கூறுகையில் : பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம் விராட் கோலியை அப்படியே ஞாபகப்படுத்துகிறார்.

இதையும் படிங்க : PAK vs AFG : பாக் பவுலர்களை சரவெடியாக நொறுக்கிய ஆப்கானிஸ்தான் டெயில் எண்டர் பேட்ஸ்மேன் – இரட்டை வரலாற்று சாதனை

ஏனெனில் பாபர் அசாம் மிகச் சிறப்பான கிரிக்கெட் ஷாட்களை விளையாடுகிறார். அதோடு போட்டியின் சூழ்நிலையும் கணித்து அவர் விளையாடுவதால் நிச்சயம் விராட் கோலி போன்றே நல்ல ஒரு வீரராக பாபர் அசாமால் வர முடியும் என டாம் முடி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement