PAK vs AFG : பாக் பவுலர்களை சரவெடியாக நொறுக்கிய ஆப்கானிஸ்தான் டெயில் எண்டர் பேட்ஸ்மேன் – இரட்டை வரலாற்று சாதனை

Mujeeb Ur Rahman 50
- Advertisement -

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இலங்கை நடைபெற்று முடிந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அபாரமாக செயல்பட்ட பாகிஸ்தான் 3 போட்டிகளிலும் வெற்றிகளை பெற்று 3 – 0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்து கோப்பையை வென்றுள்ளது. விரைவில் நடைபெறும் 2023 ஆசிய மற்றும் உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் பொதுவான இடமான இலங்கையில் நடைபெற்ற இத்தொடரில் ஆரம்பம் முதலே கடுமையாக போராடிய ஆப்கானிஸ்தானை மிகச் சிறப்பாக செயல்பட்டு வீழ்த்திய பாகிஸ்தான் இந்த அடுத்தடுத்த வெற்றிகளால் ஐசிசி தரவரிசையில் ஆஸ்திரேலியாவை முந்தி உலகின் புதிய நம்பர் ஒன் அணியாக சாதனை படைத்துள்ளது.

மறுபுறம் முதல் போட்டியில் பாகிஸ்தானை வெறும் 201 ரன்களுக்கு கட்டுப்படுத்தி போராடிய ஆப்கானிஸ்தான் பேட்டிங்கில் சுமாராக செயல்பட்டு 59 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வியை சந்தித்தது. அதே போல மனம் தளராமல் 2வது போட்டியில் வரலாற்றில் உச்சகட்டமாக 300 ரன்கள் அடித்தும் கடைசி நேரத்தில் பந்து வீச்சில் சொதப்பிய அந்த அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கோட்டை விட்டது. அந்த நிலைமையில் நடைபெற்ற 3வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 60, முகமது ரிஸ்வான் 67 என முக்கிய பேட்ஸ்மேன்களின் நல்ல ரன் குவிப்பால் 50 ஓவர்களில் 268/8 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

சரவெடி சாதனை:
அதை துரத்திய ஆப்கானிஸ்தானுக்கு ரகமதுல்லா குர்பாஸ் 5, இப்ராஹிம் ஜாட்ரான் 0, கேப்டன் ஷாஹிதி 13 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறியதால் 97/7 என பெரிய சரிவை சந்தித்து தோல்வியின் பிடியில் சிக்கியது. ஆனால் அப்போது 9வது வீரராக களமிறங்கிய முஜிப் உர் ரஹ்மான் ஆனதாகட்டும் பார்த்துக் கொள்வோம் என்ற வகையில் சரவெடியாக விளையாடி பாகிஸ்தான் பவுலர்களை பந்தாடினார். அந்த தைரியத்தின் பலனாக ஹரிஷ் ரவூப், ஷாஹின் அப்ரிடி போன்ற பவுலர்களை அடித்து நொறுக்கிய அவர் வெறும் 26 பந்துகளிலேயே 50 ரன்கள் தொட்டார்.

அதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக அரை சதமடித்த ஆப்கானிஸ்தான் வீரர் என்ற மாபெரும் சரித்திர சாதனையும் முஜீப் உர் ரஹ்மான் படைத்துள்ளார். இதற்கு முன் 2021 ஜனவரியில் அயர்லாந்துக்கு எதிராக ரசித் கான் 27 பந்துகளில் 50 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். மேலும் ஸ்பின்னரான அவர் உள்ளூர் கிரிக்கெட்டிலேயே இதற்கு முன் வெறும் 27 ரன்களை தான் அதிகபட்ச ஸ்கோராக பதிவு செய்துள்ளார்.

- Advertisement -

அப்படிப்பட்ட நிலையில் இந்த போட்டியில் வெளுத்து வாங்கி 5 பவுண்டரி 5 சிக்சரை 64 (37) ரன்களை விளாசிய அவர் ஷாஹின் அப்ரிடி வீசிய 46வது ஓவரின் கடைசி பந்தில் ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்தார். இதன் வாயிலாக சர்வதேச கிரிக்கெட்டில் ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்த முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற வித்தியாசமான சாதனையும் அவர் படைத்தார்.

இதையும் படிங்க:சிரிக்கிறீங்களா சிரிங்க, மேட்ச்ல யார் ஜெயிப்பான்னு பாப்போம் – அஜித் அகர்கருக்கு சடாப் கான் எச்சரிக்கை, காரணம் என்ன

மொத்தத்தில் ஒரு டெயில் எண்டரான அவர் பாகிஸ்தான் பவுலர்களை இந்த போட்டியில் அடித்து நொறுக்கி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார் என்றே சொல்லலாம். இறுதியில் 48.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆப்கானிஸ்தான் 59 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று ஒய்ட் வாஷ் தோல்வியை தவிர்க்கும் வாய்ப்பை கோட்டை விட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement