இந்தியா தான் இந்த வேர்ல்டுகப்பை ஜெயிக்கும். அதுவும் எப்படி தெரியுமா ? – விவ் ரிச்சர்ட்ஸ் கருத்து

Viv-Richards
Advertisement

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2023-ஆம் ஆண்டிற்கான ஐசிசி-யின் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதுவரை நடைபெற்று முடிந்துள்ள லீக் சுற்று போட்டிகளில் 9 ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இந்திய அணி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்திய அணியின் இந்த தொடர்ச்சியான வெற்றி அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டியிலும் தொடர வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடரை நிச்சயம் இந்திய அணி தான் வெல்லும் என்று பேசியுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரரான விவ் ரிச்சர்ட்ஸ் இதுகுறித்து கூறுகையில் : இந்திய அணி இந்த உலகக் கோப்பையில் தோற்கடிக்க முடியாத அணியாக இருந்து வருகிறது.

- Advertisement -

இந்த உலக கோப்பையில் இந்திய அணி பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என அனைத்திலும் அட்டகாசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது. எந்த ஒரு உலகக் கோப்பை தொடரிலும் இல்லாதவாறு இம்முறை இந்திய அணி தோல்வியையே சந்திக்காமல் கோப்பை கைப்பற்றுவது உறுதி.

கடந்த 1983 மற்றும் 2011-ஆம் ஆண்டிற்கு பிறகு ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நிச்சயம் இந்த கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் கூறுகையில் :

- Advertisement -

தற்போது வரை தோல்வியையே சந்திக்காமல் செல்லும் இந்திய அணி கோப்பையை கைப்பற்ற வேண்டிய நோக்கிலே சென்று கொண்டிருக்கிறது. அதன் காரணமாகவே ரோகித் சர்மா எந்த ஒரு மாற்றத்தையும் செய்யாமல் நிலையான அணியை கொண்டு செல்கிறார். இதுவரை நன்றாக ஆடிவிட்டோம் ஏதோ ஒரு கட்டத்தில் மோசமான ஆட்டம் வந்தே தீரும் என்ற பயம் ஏற்படலாம்.

இதையும் படிங்க : 40 ஆண்டுகள் கழித்து உலகக்கோப்பை போட்டியில் கபில் தேவின் சாதனையை சமன் செய்த – ரோஹித் சர்மா

ஆனால் அது போன்ற எதிர்மறையான சிந்தனைகளை தவிர்த்து நேர்மறையான எண்ணத்துடன் நாம் செயல்பட வேண்டும். இந்திய அணியின் எண்ணம் தற்போது அதுவாக தான் இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவது உறுதி என விவ் ரிச்சர்ட்ஸ் நம்பிக்கையை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement