40 ஆண்டுகள் கழித்து உலகக்கோப்பை போட்டியில் கபில் தேவின் சாதனையை சமன் செய்த – ரோஹித் சர்மா

Rohit-and-Kapil-Dev
- Advertisement -

இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே நேற்று அக்டோபர் 13-ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 45-வது லீக் ஆட்டத்தில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய இந்திய அணியானது 160 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.

இந்நிலையில் இந்த போட்டியில் பங்கேற்று விளையாடிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 40 ஆண்டுகளுக்கு பிறகு கபில் தேவின் சாதனையை சமன் செய்துள்ளது குறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது.

- Advertisement -

அந்த வகையில் இந்த போட்டியில் பேட்டிங்கில் துவக்க வீரராக விளையாடிய அவர் 54 பந்துகளை சந்தித்து 8 பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்கள் என 61 ரன்கள் குவித்து அசத்தினார். அதோடு மட்டுமில்லாமல் பந்துவீச்சிலும் ஐந்து பந்துகளை வீசிய ரோகித் சர்மா கடைசி வீரரான தேஜாவின் விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார்.

இதன் மூலம் ரோகித் சர்மா படைத்த சாதனை யாதெனில் : உலகக் கோப்பை போட்டிகளில் ஒரு கேப்டனாக கபில் தேவுக்கு அடுத்து ஒரு போட்டியில் 50+ ரன்கள் மற்றும் ஒரு விக்கெட்டை எடுத்த இந்திய இரண்டாவது இந்திய கேப்டன் என்ற சாதனையை உலகக் கோப்பை போட்டிகளில் இவர் படைத்து கபில் தேவின் அந்த சாதனையை சமன் செய்துள்ளார்.

- Advertisement -

இந்த தொடர் முழுவதுமே பேட்டிங்கில் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் ரோஹித் சர்மா பவர்பிளே ஓவர்களில் அடித்து நொறுக்குவதால் நிச்சயம் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியிலும் அவரது இந்த அதிரடியான பேட்டிங்கை தொடர வேண்டும் என்றும் இந்திய அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இந்த தலைமுறை இந்திய அணியிடம் அது கொஞ்சம் கூட இல்ல.. ஜெய்ப்பாங்கன்னு சொல்ல முடியாது.. மைக் ஹசி கருத்து

இந்திய அணியானது அடுத்ததாக நவம்பர் 16 ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நியூசிலாந்து அணிக்கெதிராக நடைபெறவுள்ள அரையிறுதி போட்டியில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement