இந்த தலைமுறை இந்திய அணியிடம் அது கொஞ்சம் கூட இல்ல.. ஜெய்ப்பாங்கன்னு சொல்ல முடியாது.. மைக் ஹசி கருத்து

Mike Hussey
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா சொந்த மண்ணில் வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் அதிகரித்துள்ளது. ஏனெனில் 9 போட்டியில் 9 வெற்றிகளை பெற்ற இந்தியா லீக் சுற்றில் தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து செமி ஃபைனல் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்று அசத்தியுள்ளது.

மேலும் இத்தொடரில் வெற்றிகரமான ஆஸ்திரேலியா, நடைபெற்ற சாம்பியன் இங்கிலாந்து, பரம எதிரி பாகிஸ்தான், சவாலை கொடுக்கக்கூடிய நியூசிலாந்து, வலுவான தென்னாப்பிரிக்கா போன்ற டாப் அணிகளை இந்தியா வரிசையாக தோற்கடித்தது. அத்துடன் தற்போது அணியில் விராட் கோலி முதல் ஷமி வரை அனைத்து வீரர்களும் நல்ல ஃபார்மில் உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருவதால் இந்தியா சாதிக்கும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

மைக் ஹஸி கருத்து:
இருப்பினும் கடந்த 2013க்குப்பின் நாக் அவுட் சுற்றில் சொதப்பி தோல்வியை சந்தித்து வரும் இந்தியா நவம்பர் 15ஆம் தேதி மும்பையில் நடைபெறும் முதல் செமி ஃபைனலில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. அதில் 2019 உலகக்கோப்பை செமி ஃபைனல் உட்பட பெரும்பாலும் ஐசிசி தொடரில் தோல்வியை பரிசளித்து வரும் நியூசிலாந்துக்கு எதிராக இம்முறை இந்தியா சாதிக்குமா என்ற கேள்வியும் கவலையும் ரசிகர்களிடம் இருக்கிறது.

இந்நிலையில் தற்போதைய தலைமுறையில் இருக்கும் இந்திய அணியினர் பழைய வரலாற்றை நினைத்து கொஞ்சமும் பயப்படுவதில்லை என ஆஸ்திரேலிய ஜாம்பவான் மைக்கேல் ஹஸி பாராட்டியுள்ளார். இருப்பினும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கொண்ட சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் நாக் அவுட்டில் தோற்றால் வீட்டுக்கு கிளம்ப வேண்டும் என்ற அழுத்தமான எண்ணம் இந்திய அணியின் வெற்றி நடைக்கு தடையாக இருக்கலாம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“தற்போது இந்தியா சிறப்பாக செயல்படுகிறார்கள் அல்லவா? அவர்களுடைய அணி அபாரமாக காட்சியளிக்கிறது. உண்மையாகவே அவர்கள் அனைத்து அம்சங்களிலும் பூர்த்தியடைந்துள்ளனர். அவர்கள் மிகுந்த தன்னம்பிக்கையுடன் நிலைமையில் மகிழ்ச்சியுடன் விளையாடுவது தெரிகிறது. அதனால் சந்தேகமின்றி இந்த உலகக் கோப்பையில் அவர்களை தோற்கடிக்காமல் மற்ற அணிகளால் வெல்ல முடியாது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் சொந்த மண்ணில் நடைபெறும் இத்தொடரில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் இருக்கும் அதிகப்படியான எதிர்பார்ப்பையும் அழுத்தத்தையும் கையாண்டு அவர்களால் வெல்ல முடியுமா? என்பது எனக்குள் இருக்கும் கேள்வியாகும்”

இதையும் படிங்க: க்ளாஸென் கிடையாது.. அவர் தான் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்.. இந்திய வீரருக்கு சோயப் மாலிக் பாராட்டு

“குறிப்பாக நாக் அவுட் சுற்றில் தோற்றால் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்ற நிலைமையில் அவர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பதை பார்க்க விரும்புகிறேன். அவர்களுடைய மனதில் அது தாக்கத்தை ஏற்படுத்துமா? இருப்பினும் இதுவரை நான் பார்த்ததில் தற்போதைய தலைமுறை வீரர்கள் கடந்த காலத்தையும் வரலாற்றையும் பற்றி கவலைப்படுவதில்லை. அவர்கள் தங்களுடைய சொந்த வழியில் சொந்த வரலாற்றை எழுத முயற்சிக்கின்றனர்” என்று கூறினார்.

Advertisement