க்ளாஸென் கிடையாது.. அவர் தான் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்.. இந்திய வீரருக்கு சோயப் மாலிக் பாராட்டு

Shoaib Malik 5
Advertisement

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இந்தியா தங்களுடைய 9 லீக் போட்டிகளிலும் தொடர்ச்சியாக வென்று புள்ளிப்பட்டியல் முதலிடம் பிடித்துள்ளது. குறிப்பாக நெதர்லாந்துக்கு எதிராக பெங்களூருவில் நடைபெற்ற கடைசி போட்டியில் 160 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா லீக் சுற்றில் தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக செமி ஃபைனல் சுற்றில் வெற்றிகரமாக காலடி வைக்க உள்ளது.

தீபாவளி தினத்தன்று நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ரோகித் சர்மா 61, விராட் கோலி 51, கில் 51, ராகுல் 102, ஸ்ரேயாஸ் ஐயர் 128* ரன்கள் எடுத்த உதவியுடன் 411 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ஆனால் அதை துரத்திய நெதர்லாந்து 250 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது. அந்த அணிக்கு அதிகபட்சமாக தேஜா நிதமன்று 54 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா, பும்ரா, குல்தீப் யாதவ் மற்றும் சிராஜ் தலா 2 விக்கெட்களை சாய்த்தனர்.

- Advertisement -

சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்:
முன்னதாக இப்போட்டியில் தன்னுடைய சொந்த ஊரில் அட்டகாசமாக விளையாடிய கேஎல் ராகுல் 11 பவுண்டரி 4 சிக்சருடன் 102 ரன்கள் குவித்து அசத்தினார். குறிப்பாக 62 பந்துகளில் 100 ரன்கள் தொட்ட அவர் உலகக் கோப்பை வரலாற்றில் அதிவேகமாக சதமடித்த இந்திய வீரர் என்ற ரோகித் சர்மாவின் சாதனையை உடைத்தார். கடந்த வருடம் ரொம்பவே தடுமாறியதால் கிண்டல்களுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளான அவர் காயமடைந்த ரிஷப் பண்ட்க்கு பதிலாக இந்த உலகக் கோப்பையில் மிடில் ஆர்டரில் விக்கெட் கீப்பராக அபாரமாக விளையாடி வருகிறார் என்றே சொல்லலாம்.

இந்நிலையில் 2/3 என ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் போட்டியிலேயே இந்தியா சரிந்து தடுமாறிய போது 97* ரன்கள் குவித்து இப்போட்டியில் அதிரடியாக விளையாட வேண்டிய சூழ்நிலையில் அசத்திய ராகுல் தென்னாபிரிக்காவின் ஹென்றிச் க்ளாஸென் போன்றவர்களை விட 2023 உலகக் கோப்பையின் மிகச்சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக செயல்படுவதாக சோயப் மாலிக் பாராட்டியுள்ளார். இது பற்றி ஏ ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அவர் உலக கிரிக்கெட்டில் சிறந்த 5வது இடத்தில் விளையாடும் வீரராக இருக்கிறார். க்ளாஸென் நல்ல துவக்கம் கிடைத்தால் மட்டுமே மிடில் ஆர்டரில் அசத்துகிறார். ஆனால் எந்த சூழ்நிலையிலும் அசத்தக்கூடிய சிறந்த பேட்ஸ்மேன் இந்திய அணியில் தான் இருக்கிறார். குறிப்பாக ஆரம்பத்திலேயே நீங்கள் 2 – 3 விக்கெட்டுகளை இழந்தால் ராகுல் அதற்கு தகுந்தார் போல் விளையாடுகிறார்”

இதையும் படிங்க: 24 வயதிலேயே ஓய்வை அறிவித்த நவீன் உல் ஹக்.. காரணம் இதுதான் – அவரே வெளியிட்ட பதிவு

“அதே சமயம் தேவைப்பட்டால் அவர் அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் இன்று போல ஃபினிஷிங் செய்யும் திறமையும் கொண்டுள்ளார். வேகம் மற்றும் சுழல் பவுலர்களுக்கு எதிராக நன்றாக விளையாடும் அவர் களத்தில் இடைவெளிகளை பார்த்து அடிக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் போட்டியை பினிஷிங் செய்ததை நாம் பார்த்தோம்” என்று கூறினார்.

Advertisement