24 வயதிலேயே ஓய்வை அறிவித்த நவீன் உல் ஹக்.. காரணம் இதுதான் – அவரே வெளியிட்ட பதிவு

Naveen-ul-Haq
- Advertisement -

ஹஸ்மத்துல்லா ஷாஹிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியானது இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றது. ஏனெனில் வளர்ந்து வரும் அணிகளில் முக்கிய அணியான ஆப்கானிஸ்தான் அணி இந்த உலகக் கோப்பை தொடரில் 4 போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தியது. அதிலும் குறிப்பாக இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை போன்ற சாம்பியன் அணிகளை வீழ்த்தியது அவர்களின் கிரிக்கெட் தரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றதை வெளிக்காட்டுகிறது.

அந்த வகையில் நடைபெற்று வரும் இந்த தொடரில் லீக் சுற்று போட்டிகளுடன் ஆப்கானிஸ்தான் அணி வெளியேறினாலும் அவர்கள் அணியில் இருந்த பல வீரர்கள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்தனர்.

- Advertisement -

அப்படி ஆப்கானிஸ்தான் அணியின் முக்கிய வீரராக இருந்து வரும் 24 வயதான நவீன் உல் ஹக் நடைபெற்று முடிந்த இந்த உலகக் கோப்பை தொடரின் கடைசி தென்னாபிரிக்க அணிக்கு எதிரான லீக் போட்டியுடன் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதை உறுதி செய்துள்ளார்.

ஏற்கனவே இந்த உலகக் கோப்பை தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக இந்த உலகக்கோப்பை தொடருடன் ஒருநாள் போட்டிகளில் இருந்து விடைபெறுகிறேன் என்று அறிவித்திருந்த வேளையில் தற்போது தென்ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு அவர் தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் ஓய்வு பெற்றதை உறுதி செய்துள்ளார்.

- Advertisement -

அதில் அவர் குறிப்பிட்டாதவது : ஆப்கானிஸ்தான் அணிக்காக முதல் போட்டியில் விளையாடியதில் இருந்து தற்போது கடைசியாக விளையாடி முடித்த போட்டி வரை இந்த ஜெர்சியை அணிந்து விளையாடியதை பெருமையாக நினைக்கிறேன். இருப்பினும் இனிவரும் காலங்களில் டி20 கிரிக்கெட்டில் கவனம் செலுத்தவே ஓய்வு முடிவை அறிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : ரோஹித் சர்மா கிட்ட இன்சமாம் உல் ஹக் மாதிரி அந்த ஒரு எக்ஸ்ட்ரா திறமை இருக்கு – வாசிம் அக்ரம் கருத்து

உலகெங்கிலும் நடைபெற்று வரும் டி20 லீக் போட்டிகளில் நவீன் உல் ஹக் பங்கேற்று விளையாடி வருவதால் பணிச்சுமையை கருத்தில் கொண்டும் இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது. 24 வயதான அவர் இதுவரை ஆப்கானிஸ்தான் அணிக்காக 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 22 விக்கெட்டை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement