அர்ஜெண்டினாவுக்கு மெஸி மாதிரி.. இந்தியாவுக்கு அவர் உ.கோ ஜெயிப்பாரு.. மைக்கேல் வாகன் உறுதி

Messi
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டின் புதிய சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்காக இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அதில் 45 போட்டிகள் கொண்ட லீக் சுற்றில் 23 போட்டிகளில் முடிவில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 5 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வென்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தி வருகிறது.

மேலும் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து போன்ற வலுவான அணிகளை தோற்கடித்துள்ள இந்திய அணியின் பெரும்பாலான வீரர்கள் நல்ல ஃபார்மில் இருப்பதால் சொந்த மண்ணில் 2011 போல கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் ஆழமாக உருவாகியுள்ளது. குறிப்பாக பேட்டிங் துறையில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சீனியர்களாக பொறுப்புடன் மிகச் சிறப்பாக விளையாடி பெரிய ரன்களை வெற்றிகளில் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.

- Advertisement -

மெஸி மாதிரி:
அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் 2/3 என இந்தியா சரிந்து தடுமாறிய போது 85 ரன்கள் அடித்து வெற்றி பெற வைத்த விராட் கோலி நியூசிலாந்துக்கு எதிராக 95 ரன்கள் குவித்து 20 வருடங்கள் கழித்து ஐசிசி தொடரில் வெற்றி பெறுவதற்கு உதவினார். இந்நிலையில் நியூஸிலாந்து போட்டியில் 49வது ஒருநாள் சதத்தை தவறவிட்ட விராட் கோலி விரைவில் அதை அடித்து ஃபைனலில் 50வது சதத்தை விளாசி இந்தியாவுக்கு கோப்பையை வென்று கொடுப்பார் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

குறிப்பாக அர்ஜென்டினாவுக்கு கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி உலகக்கோப்பையை வென்று கொடுத்தது போல் இம்முறை விராட் கோலி இந்தியாவின் நாயகனாக ஜொலிப்பார் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “சேசிங் செய்வதில் விராட் கோலியை தவிர்த்து யாரும் சிறப்பாக இருக்க முடியாது. ஃபைனலுக்கு முன்பாக அவர் 49வது சதத்தையும் ஃபைனலில் 50வது சதத்தையும் அடித்தால் நான் ஆச்சரியப்பட போவதில்லை”

- Advertisement -

“பொதுவாக மகத்தான வீரர்கள் எப்போதும் உலகக்கோப்பையில் தான் அற்புதமாக செயல்படுவார்கள் என்று நான் சமூக வலைதளங்களில் பதிவிடுவேன். உலக கோப்பையில் தான் மகத்தான வீரர்கள் தங்களுடைய தரத்தை நிரூபிப்பார்கள். எடுத்துக்காட்டாக கால்பந்தாட்ட வீரர் லயோனல் மெஸ்ஸி அர்ஜென்டினாவுக்கு உலகக் கோப்பையை வென்றதை சொல்லலாம். ஏற்கனவே விராட் கோலி உலகக் கோப்பையை வென்றிருந்தாலும் இம்முறை இந்தியாவை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வார் என்று நான் உணர்கிறேன்”

இதையும் படிங்க: இவரையா டீம்ல சேக்க மாட்றீங்க? சையத் முஷ்டாக் அலி தொடரில் சம்பவம் செய்த புவனேஷ்வர் குமார் – விவரம் இதோ

“மேலும் இந்திய அணியை எப்படி நிறுத்த முடியும் என்பதையும் நான் பார்க்க விரும்புகிறேன். ஏனெனில் இந்த நிமிடம் அது கடினமாகும். ஏனெனில் பிட்ச்கள் பெரிதாக உதவுவதில்லை. சொல்லப்போனால் சென்னையில் ஆரம்பத்திலேயே 3 விக்கெட்டுகளை ஆஸ்திரேலியா எடுத்து அவர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்தனர். ஆனாலும் அதே போல மற்ற அணியினரால் செய்ய முடியுமா என்பது எனக்கு தெரியாது” என்று கூறினார்.

Advertisement