நெதர்லாந்தை பந்தாடி சச்சினின் சாதனை சமன்.. பாண்டிங்கை முந்திய வார்னர் உ.கோ லெஜெண்டாக சாதனை

David Warner 2
- Advertisement -

இந்தியாவில் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 25ஆம் தேதி நகர் டெல்லியில் நடைபெற்ற 24வது லீக் போட்டியில் வலுவான ஆஸ்திரேலியா கத்துக்குட்டி நெதர்லாந்தை எதிர்கொண்டது. மதியம் 2 மணிக்கு துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்று ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து 50 ஓவர்களில் அதிரடியாக விளையாடும் 399/8 ரன்கள் குவித்து மிரட்டியது.

அந்த அணிக்கு மிட்சேல் மார்ஷ் ஆரம்பத்திலேயே 9 ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய டேவிட் வார்னர் வேகமாக ரன்களை சேர்த்தார். அவருடன் ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் இந்த உலகக் கோப்பையில் முதல் முறையாக நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி 2வது விக்கெட்டுக்கு 132 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அரை சதமடித்து 71 (68) ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

வார்னரின் சாதனை:
அந்த நிலையில் வார்னர் 50 ரன்கள் கடந்து அசத்திய நிலையில் எதிர்புறம் வந்த மார்னஸ் லபுஸ்ஷேன் தன்னுடைய தரத்தைக் காட்டி அரைசதம் கடந்து 62 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஆனால் மறுபுறம் தொடர்ந்து நெதர்லாந்து பவுலர்களை பந்தாடிய வார்னர் 11 பவுண்டரி 3 சிக்சருடன் சதமடித்து 104 (93) ரன்கள் விளாசி அவுட்டானார்.

இதன் வாயிலாக உலகக்கோப்பை வரலாற்றில் அதிக சதங்கள் அடித்த ஆஸ்திரேலிய வீரர் என்ற ரிக்கி பாண்டிங் சாதனையை உடைத்த அவர் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் ரிக்கி பாண்டிங் 42 இன்னிங்ஸில் 5 சதங்கள் அடித்திருந்த நிலையில் டேவிட் வார்னர் 23 இன்னிங்சிலேயே 6 சதங்கள் அடித்து இந்த சாதனையை படைத்தார். அத்துடன் உலகக் கோப்பையில் அதிக சதங்கள் அடித்த 2வது வீரர் என்ற இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் (6) ஆல் டைம் சாதனையையும் வார்னர் சமன் செய்தார்.

- Advertisement -

ஆனால் அவருக்குப் பின் வந்த பின் ஜோஸ் இங்லிஷ் 14 ரன்களில் அவுட்டானாலும் கிளன் மேக்ஸ்வெல் களமிறங்கிய முதல் பந்திலிருந்தே நெதர்லாந்து பவுலர்களை சரமாரியாக அடித்து நொறுக்கி வெறும் 27 பந்துகளில் 50 ரன்கள் கடந்தார். அதே வேகத்தில் கடைசி 10 ஓவர்களில் டெல்லி ரசிகர்களுக்கு வானவேடிக்கை நிகழ்த்திய அவர் வெறும் 40 பந்துகளில் 100 ரன்கள் கடந்து உலகக் கோப்பையில் அதிவேகமாக சதமடித்த வீரர் என்ற புதிய உலக சாதனை படைத்தார்.

இதையும் படிங்க: இவரையா டீம்ல சேக்க மாட்றீங்க? சையத் முஷ்டாக் அலி தொடரில் சம்பவம் செய்த புவனேஷ்வர் குமார் – விவரம் இதோ

இதற்கு முன் இதே டெல்லி மைதானத்தில் இலங்கைக்கு எதிராக தென்னாப்பிரிக்காவின் ஐடன் மார்க்ரம் 49 பந்துகளில் 100 ரன்கள் தொட்டதே முந்தைய சாதனையாகும். அந்த வகையில் மேக்ஸ்வெல் 9 பவுண்டரி 8 சிக்ஸருடன் 106 (44) ரன்கள் விளாசி சூப்பர் ஃபினிஷிங் கொடுத்த நிலையில் சுமாராக செயல்பட்ட நெதர்லாந்து சார்பில் அதிகபட்சமாக வேன் பீக் 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.

Advertisement