இவரையா டீம்ல சேக்க மாட்றீங்க? சையத் முஷ்டாக் அலி தொடரில் சம்பவம் செய்த புவனேஷ்வர் குமார் – விவரம் இதோ

Bhuvi
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான புவனேஸ்வர் குமார் கடந்த 2012-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 121 ஒருநாள் போட்டிகள், 21 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 87 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அது மட்டுமின்றி சர்வதேச கிரிக்கெட்டில் இவர் மொத்தமாக கிட்டத்தட்ட 300 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

பவர்பிளே ஓவர்களில் ஸ்விங் செய்து அட்டகாசமாக பந்துவீசும் இவரது பந்துவீச்சு பெரும்பாலும் இந்திய அணிக்கு வெற்றியையே வழங்கி வந்த வேளையில் புதுப்புது பந்துவீச்சாளர்களின் வருகையின் காரணமாக புவனேஸ்வர் குமார் படிப்படியாக முதன்மை அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு வந்தார்.

- Advertisement -

தற்போது 33 வயதான புவனேஸ்வர் குமார் இன்றளவும் தனது மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 2023-ஆம் ஆண்டிற்கான 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் அவருக்கு இடம் கிடைக்காத வேளையில் அவர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார்.

அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் சையது முஷ்டாக் அலி தொடரில் உத்தர பிரதேஷ் அணிக்காக களம் இறங்கி விளையாடி வருகிறார். இந்நிலையில் கர்நாடக அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற ஒரு முக்கிய போட்டியில் புவனேஸ்வர் குமார் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தி உள்ளது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் அபிமன்யு கிரிக்கெட் அகாடமி மைதானம் டேராடூனில் நடைபெற்ற இந்த போட்டியில் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்திய புவனேஷ்வர் குமார் 3.3 ஓவர்கள் மட்டுமே வீசி 16 ரன்களை விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அவரது பந்துவீச்சிக்கு எதிராக தாக்குப்பிடிக்காத கர்நாடகா அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் உத்தரப்பிரதேச அணியிடம் தோல்வி அடைந்தது.

இதையும் படிங்க : பாகிஸ்தான் தோற்றதில் உங்களுக்கு என்ன சந்தோசம்.. இர்பான் பதானை விளாசிய கம்ரான் அக்மல்

கடந்த 2012-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி இன்றளவும் புவனேஷ் குமார் விளையாடி வந்தாலும் அவருக்கு பெரிய தொடர்களில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வரும் வேளையில் தற்போதும் அவர் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். அதோடு ஐபிஎல் தொடரிலும் அவர் ஒரு அட்டகாசமான பவுலராகவும் திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement