பாகிஸ்தான் தோற்றதில் உங்களுக்கு என்ன சந்தோசம்.. இர்பான் பதானை விளாசிய கம்ரான் அக்மல்

Kamran Akmal
Advertisement

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் தங்களுடைய முதல் 5 போட்டிகளில் 2 வெற்றிகளையும் 3 தோல்விகளையும் பதிவு செய்து தடுமாறி வருகிறது. குறிப்பாக பரம எதிரி இந்தியாவுக்கு எதிராக 191 ரன்களுக்கு சுருண்டு உலகக்கோப்பையில் தொடர்ந்து 8வது முறையாக தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தோற்று அவமானத்தையும் சந்தித்தது.

அதனால் செமி ஃபைனல் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு எஞ்சிய போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டுள்ளது அந்நாட்டு ரசிகர்களிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 282 ரன்களை கட்டுப்படுத்த முடியாத பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முறையாக தோல்வியை பதிவு செய்து தலைகுனிவுக்கு உள்ளானது.

- Advertisement -

என்னா ஒரு சந்தோசம்:
மறுபுறம் பல வருடங்களாக காத்திருந்து பாகிஸ்தானை சாய்த்த ஆப்கானிஸ்தான் வீரர்கள் அதை சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி வந்து தமிழக ரசிகர்களுடன் சேர்ந்து கொண்டாடினார்கள். அப்போது ஸ்டார்ட் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் போட்டியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் அதை பாதையில் நிறுத்தி விட்டு ரசித் கானுடன் சேர்ந்து நடனமாடி பாகிஸ்தானின் தோல்வியை கொண்டாடினார்.

மேலும் சத்தியத்தை காப்பாற்றிய ரசித் கானுக்கு தாம் கொடுத்த சத்தியத்தை காப்பாற்றியதாகவும் அவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் பாகிஸ்தான் தோல்வியை இர்பான் பதான் அப்படி கொண்டாடியது ஆச்சரியத்தை கொடுப்பதாக முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அசாத்தியமான வெற்றி பெற்ற போது கூட கொண்டாடாத நீங்கள் இப்போது கொண்டாடுவது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

- Advertisement -

மேலும் வர்னணையாளராக செயல்படும் இர்பான் பதான் இரு அணிக்கும் பொதுவாக நடந்து கொள்ளாமல் இப்படி ஒரு தலைபட்சமாக கொண்டாடியதை கண்டிப்பதாகவும் தெரிவிக்கும் கம்ரான் அக்மல் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “இர்பான் பதான் நடனமாடியது எனக்கு ஆச்சரியமாக அமைந்தது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்தியா தோற்கடித்த போது கூட அவரிடம் இவ்வளவு மகிழ்ச்சியை பார்த்ததாக எனக்கு நினைவில்லை”

இதையும் படிங்க: காயத்திலிருந்து மீண்டு வந்த அக்சர் படேல். சையத் முஷ்டாக் அலி தொடரில் காட்டடி பேட்டிங் – விவரம் இதோ

“ஆனால் பாகிஸ்தானை ஆப்கானிஸ்தான் தோற்கடித்ததில் அவரிடம் அதிக மகிழ்ச்சி தெரிகிறது. இதை பார்த்ததில் எனக்கு வருத்தமாக இருந்தது. எனக்கு மட்டுமல்ல தேசத்திற்கும். ஒளிபரப்பாளர்கள் இதைப்பற்றி சிந்திக்க வேண்டும். ஏனெனில் நடுநிலை வர்ணனையாளர்கள் இதை செய்யக்கூடாது” என்று கூறினார். இருப்பினும் ட்விட்டரில் அடிக்கடி தம்மை வம்பிழுக்கும் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே இர்பான் பதான் அப்படி கொண்டாடியிருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement