பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியானது தற்போது இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கு நடைபெற்று வரும் நடப்பு 2023 ஆம் ஆண்டிற்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னர் அரையிறுதிக்கு தகுதி பெறும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட பாகிஸ்தான் இந்த தொடர் முழுவதுமே சற்று ஏமாற்றமான செயல்பாட்டையை வெளிப்படுத்தி உள்ளது.
குறிப்பாக முதல் 2 ஆட்டங்களை வெற்றியுடன் துவங்கிய பாகிஸ்தான் அணி அடுத்ததாக தொடர்ச்சியாக நான்கு தோல்களை சந்தித்தது. பின்னர் இறுதியாக நடைபெற்ற பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று தற்போது 8 போட்டிகளில் முடிவில் நான்கு வெற்றிகள் பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் நான்காம் இடத்தில் இருக்கின்றனர்.
மேலும் இன்னும் அந்த அணிக்கு ஒரு லீக் போட்டி மட்டுமே எஞ்சியுள்ள வேளையில் அந்த போட்டியில் பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணியை 287 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தினால் மட்டுமே அரையிறுக்கான வாய்ப்பு இருக்கும்.
இவ்வேளையில் கிட்டத்தட்ட அவர்களது அரையிறுதி கனவு பறிபோகிவிட்டது என்றே கூறலாம். மேலும் பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக இவ்வளவு பெரிய வெற்றியை எல்லாம் பெற முடியாது என்பதே பலரது கருத்தாகவும் உள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியை கிண்டல் செய்யும் விதமாக இந்திய அணியின் முன்னாள் வீரரான வீரேந்திர சேவாக் ஒரு கருத்தினை பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டதாவது : இந்தியா வந்த நீங்கள் பிரியாணி சாப்பிட்டாச்சா அப்புறம் என்ன ஊருக்கு கிளம்புங்க.. பாகிஸ்தான் வாழ்க.. அவ்வளவுதான்.. பிரியாணி மற்றும் எங்களது உபசரிப்பு எல்லாம் நன்றாக இருந்தது என்று நம்புகிறோம். உங்கள் நாட்டிற்கு விமானம் ஏறி செல்லுங்கள் என்று பதிவிட்டுள்ளார். அவரது இந்த கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : இந்தியா – நெதர்லாந்து போட்டியில் வெல்லப்போவது யார்? வரலாற்று புள்ளிவிவரம் சொல்வது என்ன.. விரிவான அலசல்
ஏற்கனவே பாகிஸ்தான் அணி வீரர்கள் இந்தியா வந்தடைந்ததும் ஐதராபாத் நகரில் தங்கி ஹைதராபாத் பிரியாணி சாப்பிட்டது மட்டும் இன்றி பலவகையான உணவுகளையும் ஆர்டர் செய்து சாப்பிட்டு இருக்கின்றனர். இப்படி தொடர்ச்சியாக பாகிஸ்தான் அணி வீரர்கள் உணவுக்கு முக்கியத்துவம் கொடுத்து போட்டிகளில் கோட்டை விட்டதாக பலரும் கிண்டல் செய்த வேளையில் சேவாக்கும் அவர்களை கிண்டல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.