இந்தியா – நெதர்லாந்து போட்டியில் வெல்லப்போவது யார்? வரலாற்று புள்ளிவிவரம் சொல்வது என்ன.. விரிவான அலசல்

Advertisement

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி தினத்தன்று பெங்களூருவில் நடைபெறும் 45வது மற்றும் கடைசி லீக் போட்டியில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. அதில் ஏற்கனவே தொடர்ச்சியான 8 வெற்றிகளை பெற்று செமி ஃபைனல் சுற்றுக்கு முதல் அணியாக இந்தியா தகுதி பெற்றுள்ள நிலையில் முடிந்தளவுக்கு போராடி 2 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்த நெதர்லாந்து லீக் சுற்றுடன் வெளியேறியுள்ளது.

இருப்பினும் ஆறுதல் வெற்றியுடன் இத்தொடரை நிறைவு செய்வதற்காக போராட உள்ள நெதர்லாந்து அணியில் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் பேட்டிங் துறையில் தரமான வீரராக சவாலை கொடுக்க உள்ளார். அதே போல பஸ் டீ லீடி மிகச்சிறந்த ஆல் ரவுண்டராக செயல்பட்டு ரசிகர்களின் பாராட்டுகளை அள்ளி வரும் நிலையில் வேன் டெர் மெர்வி சவாலை கொடுக்கும் அளவுக்கு நல்ல ஸ்பின்னராக இருக்கிறார்.

- Advertisement -

வெல்லப்போவது யார்:
இவர்களை தவிர்த்து விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓ’தாவுத், டேஜா நிதமன்ரு, பரேசி, கோலின் ஆகர்மேன், எங்கேல்பேர்ச்ட் ஆகிய பேட்ஸ்மேன்கள் தொடர்ச்சியாக அசத்துவதற்கு தடுமாறினாலும் இப்போட்டியில் இந்திய பவுலர்களுக்கு முடிந்தளவுக்கு சவாலை கொடுக்கும் முனைப்புடன் களமிறங்க உள்ளனர். மேலும் பால் மீக்ரன், ஆர்யன் தத், வேன் பீக் ஆகிய பவுலர்களும் தங்களுடைய கடைசி போட்டியில் வலுவான இந்தியாவை தோற்கடிக்க போராட உள்ளனர்.

மறுபுறம் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, கில், ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் நல்ல ஃபார்மில் இந்திய பேட்டிங் துறையை வலுப்படுத்துகிறார்கள். அதே போல ஷமி, சிராஜ், பும்ரா ஆகியோர் வேகத்தில் நெதர்லாந்து பேட்ஸ்மேன்களை தெறிக்க விடுவார்கள் என்று உறுதியாக நம்பலாம். மேலும் ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோருடைய சுழலுக்கு நெதர்லாந்து தாக்குப் பிடிக்குமா என்பதும் சந்தேகமாகும்.

- Advertisement -

மொத்தத்தில் மகத்தான ஆஸ்திரேலியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, வலுவான நியூசிலாந்து, பரம எதிரி பாகிஸ்தான், அடித்து நொறுக்கக்கூடிய தென்னாப்பிரிக்கா போன்ற டாப் அணிகளை இத்தொடரில் தோற்கடித்த இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் கில்லியாக செயல்பட்டு வருகிறது. எனவே கத்துக்குட்டியாக பார்க்கப்படும் நெதர்லாந்தை குறைத்து மதிப்பிடாமல் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நேர்த்தியாக விளையாடி இப்போட்டியிலும் வென்று 9வது வெற்றியை பதிவு செய்யும் என்று உறுதியாக சொல்லலாம்.

வரலாற்று புள்ளி விவரம்:
ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் இதுவரை மொத்தம் 2 போட்டிகளில் போட்டிகளில் விளையாடியுள்ளன. அந்த 2 போட்டிகளிலும் இந்தியா வென்று வலுவான அணியாக திகழ்கிறது. சொல்லப்போனால் 2003 மற்றும் 2011 உலகக் கோப்பைகளில் நடைபெற்ற அந்த 2 போட்டிகளிலும் இந்தியா வெற்றி வாகை சூடியுள்ளது.

இதையும் படிங்க: பாகிஸ்தான் செமி பைனல்ஸ்ல ஆடனும்னா இந்த ஒரு வழிதான் இருக்கு – வாசிம் அக்ரம் கலகலப்பு

ஒருநாள் கிரிக்கெட்டிலும் உலகக் கோப்பையிலும் நெதர்லாந்துக்கு எதிராக அதிக ரன்கள் (88) எடுத்த இந்திய வீரராக யுவராஜ் சிங் அதிகபட்ச ஸ்கோர் (52) பதிவு செய்த இந்திய வீரராக சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் இருக்கின்றனர். அதே போல அதிக விக்கெட்களை எடுத்த இந்திய பவுலர்களாக ஜாகிர் கான், அனில் கும்ப்ளே, ஜவகல் ஸ்ரீநாத் (தலா 4) உள்ளனர். நெதர்லாந்துக்கு எதிராக இந்தியா பதிவு செய்துள்ள அதிகபட்ச ஒருநாள் ஸ்கோர் : 204 ரன்களாகும்.

Advertisement