பாகிஸ்தான் செமி பைனல்ஸ்ல ஆடனும்னா இந்த ஒரு வழிதான் இருக்கு – வாசிம் அக்ரம் கலகலப்பு

Wasim-Akram
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் லீக் சுற்று போட்டிகள் முடிவடைய உள்ள வேளையில் இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய மூன்று அணிகள் அரையிறுதிக்கான வாய்ப்பினை உறுதி செய்து விட்டனர். அதனை தொடர்ந்து நான்காவது இடத்திற்கான போட்டி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த உலகக் கோப்பை தொடரின் நான்காவது இடத்திற்கான வாய்ப்பு கடந்த சில தினங்களுக்கு முன்னர் வரை நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் என மூன்று அணிகளுக்கு இருந்தது. ஆனால் ஆப்கானிஸ்தான் அணியின் கடைசி இரு தோல்விகளால் அந்த அணி அரையிறுதி வாய்ப்பை இழந்தது.

- Advertisement -

அதனை தொடர்ந்து நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நிலவி வரும் வேளையில் நியூசிலாந்து அணி 9 போட்டிகளில் ஐந்து வெற்றிகளுடன் 10 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்தில் உள்ளது. அதேவேளையில் பாகிஸ்தான் அணி தற்போது 8 போட்டிகளில் விளையாடி நான்கு வெற்றிகளுடன் 8 புள்ளிகளில் இருப்பதால் இங்கிலாந்து அணிக்கு எதிராக கடைசி போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும்.

அப்படி பாகிஸ்தான அணி அந்த போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் 10 புள்ளிகளை பெற்று நியூசிலாந்து அணியோடு சமன் செய்யும் ஆனாலும் ரன் ரேட் அடிப்படையில் தான் நான்காவது இடத்தினை பிடிக்கப்போகும் அணி எது? என்பது உறுதியாகும். பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற வேண்டுமெனில் இங்கிலாந்து அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்து பெரிய ரன்கள் குவித்து இங்கிலாந்து அணியை 287 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும்.

- Advertisement -

அப்படியானால் பாகிஸ்தான் அணி குறைந்தது 400 ரன்களை முதலில் பேட்டிங் செய்து அடித்து அதன் பின்னர் இங்கிலாந்தை 112 ரன்களில் சுருட்ட வேண்டும். இப்படி மிகப்பெரிய வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தினால் மட்டுமே அந்த அணியால் அரையிறுதிக்கு தகுதி பெற முடியும். இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் இந்த கடினமான வாய்ப்பு குறித்து பேசிய அந்த அணியின் முன்னாள் வீரரான வாசிம் அக்ரம் கூறுகையில் :

இதையும் படிங்க : வரலாற்றிலேயே இல்லாதது 2023 இந்திய அணியிடம் இருக்கு.. நாக் அவுட்டில் ஜெய்க்க அதை மட்டும் செய்ங்க.. டிகே கருத்து

தற்போது உள்ள புள்ளி விவரப்படி பாகிஸ்தான் அணிக்கு அரையிறுதி வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அது பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து அதிக ரன்கள் குவிக்க வேண்டும். பின்னர் இங்கிலாந்து அணியை ட்ரெஸ்ஸிங் ரூமில் வைத்து பூட்டி விட்டால் டைம் அவுட் விதிமுறை மூலம் பாகிஸ்தான் அணி எளிதாக அரையிறுதிக்கு முன்னேறி விடும் என்று நகைச்சுவையாக பேசியுள்ளார். எது எப்படி இருப்பினும் கிட்டத்தட்ட பாகிஸ்தான் அரையிறுதி வாய்ப்பை 90 சதவீதம் இழந்தது என்றே கூறலாம்.

Advertisement