வரலாற்றிலேயே இல்லாதது 2023 இந்திய அணியிடம் இருக்கு.. நாக் அவுட்டில் ஜெய்க்க அதை மட்டும் செய்ங்க.. டிகே கருத்து

Dinesh Karthik 2
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிப்பதற்காக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இதுவரை விளையாடிய 8 போட்டிகளிலும் இந்தியா 8 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. அதனால் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள இந்தியா முதல் அணியாக தகுதி பெற்றுள்ளாதல் சொந்த மண்ணில் 2011 உலகக் கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் மிகவும் ஆழமாக ஏற்பட்டுள்ளது.

ஏனெனில் தற்போதைய அணியில் பேட்டிங் துறையில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, கில், ராகுல் ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற அனைவருமே நல்ல ஃபார்மில் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கு போட்டியாக பும்ரா, சிராஜ் முகமது, ஷமி ஆகியோர் வேகத்தில் எதிரணி பேட்ஸ்மேன்களை தெறிக்க விட்டு பெரிய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகின்றனர்.

- Advertisement -

வலுவான அணி:
அதே போல குல்தீப் யாதவ், ஜடேஜா ஆகியோர் சுழலில் மாயாஜாலம் நிகழ்த்தி மிடில் ஓவர்களில் விக்கெட்களை எடுப்பதால் சொந்த மண்ணில் இந்தியா இதுவரை யாராலும் தோற்கடிக்க முடியாத வலுவான அணியாக ஜொலித்து வருகிறது. இருப்பினும் 2019 உலகக்கோப்பை செமி ஃபைனல் உட்பட ஐசிசி தொடர்களில் பெரும்பாலும் தோல்விகளை மட்டுமே சந்தித்து வரும் நியூஸிலாந்தை நவம்பர் 15ஆம் தேதி மும்பையில் நடைபெறும் செமி ஃபைனலில் எதிர்கொள்வது இந்திய ரசிகர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தற்போதைய இந்திய அணி தான் ஒருநாள் கிரிக்கெட்டின் வரலாற்றில் மிகவும் வலுவான அணியாக இருப்பதாக தினேஷ் கார்த்திக் பாராட்டியுள்ளார். இருப்பினும் மும்பையில் நடைபெறும் செமி ஃபைனலில் வெற்றி பெற முதலில் பேட்டிங் செய்தாலும் சேசிங் செய்தாலும் முதல் 10 ஓவர்களில் எதிரணி பவுலர்களை சமாளித்து ஆரம்பத்திலேயே அதிக விக்கெட்கள் இழக்காமல் இந்தியா நங்கூரமாக விளையாடுவது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “தற்போதைய அணி ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா கண்ட மிகவும் வலுவான அணியாக இருக்கிறது. 2023 அணியை போல இதற்கு முந்தைய இந்திய அணிகள் குறிப்பாக உலகக் கோப்பை வரலாற்றில் இப்படி அடித்து நொறுக்கும் செயல்பாடுகளை வெளிப்படுத்தியதில்லை. இதற்கு முன் சில இந்திய அணிகள் நீங்கள் சிறப்பாக செயல்பட்டது என்று சொல்லலாம்”

இதையும் படிங்க: அதை நெனச்சா பெருமையா இருக்கு.. செமி ஃபைனலை அங்க தவற விட்டோம்.. ஆப்கானிஸ்தான் கேப்டன் பேட்டி

“செமி ஃபைனல் மும்பையில் நடக்கிறது. அதில் நீங்கள் டாஸ் வென்று முதலில் பேட்டிங் அல்லது பவுலிங் ஆகியவற்றில் எதை தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள் என்பது மிகப்பெரிய முடிவாகும். ஏனெனில் அங்கே லேசாக பனி இருக்கும். அதனால் அங்கே முதல் ஸ்பெல்லை நீங்கள் கடந்து செல்ல வேண்டும். குறிப்பாக முதல் 10 ஓவர்களில் பந்து ஸ்விங்காகி நகரும். எனவே ஃபைனல் வரை எந்த நிலைமையில் இருக்கும் என்ற கேள்விக்கு இடமில்லை. அதில் இந்தியா அதே 11 பேருடன் களமிறங்கும். ஏனெனில் அனைத்து வீரர்களும் சிறப்பாக செயல்பட்டு கட்டங்களை பூர்த்தி செய்துள்ளனர்” என்று கூறினார்.

Advertisement