2019இல் ஏமாத்திட்டாரு.. இம்முறை அவர சச்சின் மாதிரி நாம தோளில் தூக்கனும் – சேவாக்கின் வித்யாச ஆசை

Virender Sehwag 7.jpeg
- Advertisement -

இந்தியாவில் நடைபெறும் ஐசிசி 2023 உலக கோப்பையில் தங்களுடைய முழு திறமையை வெளிப்படுத்தி தேசத்திற்காக சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு உலகின் அனைத்து முன்னணி வீரர்களும் தயாராக உள்ளனர். அந்த வரிசையில் சொந்த மண்ணில் 2011 போல கோப்பையை வென்று சொந்த ரசிகர்களின் நீண்ட கால தாகத்தை தணிப்பதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் கிட்டத்தட்ட அனைவருமே நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள்.

அதில் பேட்டிங் துறையில் விராட் கோலி சுப்மன் கில், கேஎல் ராகுல் ஆகியோரை காட்டிலும் இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ரசிகர்களின் மிகப்பெரிய நம்பிக்கையாக இருக்கிறார் என்றால் மிகையாகாது. ஏனெனில் கடந்த 15 வருடங்களாக ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடி வரும் அவர் சச்சினையே மிஞ்சி அதிவேகமாக 10,000 ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்து 47 சதங்கள் விளாசி நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார்.

- Advertisement -

சேவாக்கின் கோரிக்கை:
மேலும் சேசிங் செய்வதிலும் சரி 2022 டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான அழுத்தமான போட்டிகளிலும் சரி எப்போதுமே அவர் எதிரணிக்கும் இந்தியாவின் வெற்றிக்கும் குறுக்கே நிற்பவராக இருக்கிறார் என்று சொல்லலாம். இந்நிலையில் சச்சினுக்கு நிகரான அந்தஸ்தை கொண்டுள்ள விராட் கோலி இம்முறை அதிக ரன்கள் குவித்து இந்தியாவுக்கு கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் என்று வீரேந்திர சேவாக் கோரிக்கை வைத்துள்ளார்.

குறிப்பாக கடந்த 2019 உலகக் கோப்பையில் ஒரு சதம் கூட அடிக்காத நீங்கள் இம்முறை அதிக ரன்கள் குவித்த வீரராக சாதனை படைத்து இந்தியாவை வெற்றி பெற வைத்தால் நாங்கள் 2011இல் சச்சினை போல தோளில் தூக்கி கொண்டாடுவதற்கு தயாராக இருக்கிறோம் என்று விராட் கோலியை கேட்டுக் கொள்ளும் சேவாக் இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் பேசியது பின்வருமாறு. “ச்சீக்கு (விராட் கோலி) 2019 உலகக்கோப்பையில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை”

- Advertisement -

“எனவே இந்த வருடம் அவர் நிறைய சதங்கள் அடித்து இத்தொடரின் அதிக ரன்கள் குவித்த வீரராக சாதனை படைப்பார் என்று நம்புகிறேன். அதன் பின் அவரை நாம் தோள் மீது சுமந்து மைதானத்தில் வலம் வருவதையும் பார்க்க விரும்புகிறேன்” என்று கூறினார். அத்துடன் விராட் கோலி போலவே ரோஹித் சர்மாவும் இந்த உலக கோப்பையை வெல்வதற்கு தகுதியானவர் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி மேலும் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க: 2018இல் நெட் பவுலரா இருந்தப்போவே.. அவரோட தரத்தை புரிஞ்சுக்கிட்டேன்.. ஹரிஷ் ரவூப் பேட்டி

“விராட் மற்றும் ரோஹித் ஆகிய 2 சீனியர்களுமே இந்த உலகக் கோப்பையை வெல்வதற்கு தகுதியானவர்கள். அதில் ரோகித் சர்மா 2011 உலகக் கோப்பை அணியை நெருங்கியும் தவற விட்டார். பின்னர் அவர் ஒருநாள் கிரிக்கெட்டின் ராஜாவாக உருவெடுத்துள்ளார். எனவே அவர் உலகக் கோப்பையை வெல்வதற்கு தகுதியானவர்” என்று கூறினார்.

Advertisement