2018இல் நெட் பவுலரா இருந்தப்போவே.. அவரோட தரத்தை புரிஞ்சுக்கிட்டேன்.. ஹரிஷ் ரவூப் பேட்டி

Haris Rauf
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்காக அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்கள். குறிப்பாக 1992 முதல் இதுவரை சந்தித்த 7 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வென்றுள்ள இந்தியா இம்முறையும் சொந்த மண்ணில் பாகிஸ்தானை தோற்கடித்து காலம் காலமாக வைத்திருக்கும் கௌரவத்தை காப்பாற்றுமா என்ற எதிர்பார்ப்பு இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் காணப்படுகிறது.

இந்த நிலையில் முந்தைய தலைமுறையில் சச்சின் டெண்டுல்கர் எந்தளவுக்கு பாகிஸ்தானுக்கு எதிராக சிம்ம சொப்பனமாக விளங்கினாரோ தற்போது அதற்கு நிகராக விராட் கோலி இருக்கிறார் என்றால் மிகையாகாது. ஏனெனில் 2015 உலகக் கோப்பையில் அடிலெய்ட் நகரில் சதமடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தது முதல் 2022 டி20 உலகக்கோப்பையில் மெல்போர்ன் நகரில் தனி ஒருவனாக பாகிஸ்தானின் தோற்கடித்தது வரை அந்நாட்டுக்கு எதிராக விராட் கோலி எப்போதுமே அசத்தி வருகிறார்.

- Advertisement -

கிங் கோலியின் தரம்:
சொல்லப்போனால் 2023 ஆசிய கோப்பையில் கூட ஆட்டநாயகன் விருது வென்று பாகிஸ்தானை தோற்கடிக்க முக்கிய பங்காற்றிய விராட் கோலி இம்முறையும் அசத்துவார் என்று நம்பலாம். முன்னதாக 2022 டி20 உலக கோப்பையில் மகத்தான இன்னிங்ஸ் விளையாடிய விராட் கோலி 150 கி.மீ வேகத்தில் வீசக்கூடிய பாகிஸ்தானின் நட்சத்திர பவுலர் ஹாரிஸ் ரவூப்க்கு எதிராக பின்னங்காலில் நேராக அடித்த சிக்சர் மொத்த உலகத்தையும் வியந்து பாராட்ட வைத்ததை மறக்க முடியாது.

இந்நிலையில் 2018ஆம் ஆண்டு இந்திய அணியில் நெட் பவுலராக இருந்த போதே விராட் கோலியின் தரத்தை பார்த்ததாக ஹரிஷ் ரவூப் தெரிவித்துள்ளார். குறிப்பாக வலைப்பயிற்சியிலேயே ஒரு பெரிய போட்டியில் விளையாடுவது போன்ற சவாலை விராட் கோலி கொடுத்ததாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “இந்திய அணியில் நான் நெட் பவுலராக இருந்த போது விராட் கோலிக்கு எதிராக நான் நிறைய பந்து வீசியிள்ளேன்”

- Advertisement -

“அப்போதெல்லாம் நான் வீசும் பந்துகள் தன்னுடைய பேட்டில் எங்கே அடிக்கப் போகிறது என்பதை நன்கு தெரிந்தது போல் அவர் விளையாடியதாக நான் உணர்ந்தேன். ஏனெனில் அவர் அந்தளவுக்கு மிகுந்த கவனத்துடன் இருந்தார். அது அவருடைய செறிவு எவ்வளவு கூர்மையாக இருக்கிறது என்பதை காட்டுகிறது. அதனால் வலைப்பயிற்சியில் கூட அவருக்கு எதிராக சாதாரண நெட் பவுலராக இருந்தாலும் நான் ஒரு போட்டியில் விளையாடுவதை போன்ற உணர்வை பெற்றேன்

இதையும் படிங்க: குறைந்தது 2 சதம் அடிப்பாரு.. இந்த உ.கோ அவோரோடதா இருக்கும்.. ஆகாஷ் சோப்ரா மாஸ் கணிப்பு

“அவருடைய கட்டுப்பாடு மற்றும் ஆர்வம் ஆகியன கிரிக்கெட்டில் எதனால் அவர் இவ்வளவு பெரிய பெயரை பெற்றுள்ளார் என்பதை புரிய வைத்தது. அதே போல ஆரம்ப காலங்களில் நான் டேல் ஸ்டைன் விக்கெட்களை எடுத்த பின் வெளிப்படுத்தும் ஆக்ரோசத்தை பார்த்துள்ளேன். அவர் தான் எனக்கு உத்வேகத்தை கொடுத்த ரோல் மாடல் ஆவார்” என்று கூறினார்.

Advertisement