குறைந்தது 2 சதம் அடிப்பாரு.. இந்த உ.கோ அவோரோடதா இருக்கும்.. ஆகாஷ் சோப்ரா மாஸ் கணிப்பு

Aakash Chopra 5
- Advertisement -

உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் தயாராக இருக்கின்றனர். குறிப்பாக 2023 ஆசிய கோப்பை 8வது முறையாக வென்று சாதனை படைத்த இந்திய அணியினர் அடுத்ததாக வலுவான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரையும் வென்று தரவரிசையில் உலகில் நம்பர் ஒன் அணியாக முன்னேறி நல்ல ஃபார்முக்கு திரும்பியுள்ளனர்.

எனவே இம்முறை நிச்சயமாக சொந்த மண்ணில் 2011 போல இந்தியா கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் பேட்டிங் துறையை பொறுத்த வரை கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, கில், ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் உட்பட அனைவருமே நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள். அதில் இளம் துவக்க வீரர் சுப்மன் கில் கடந்த ஒரு வருடத்தில் 3 வகையான சர்வதேச கிரிக்கெட்டிலும் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரராக சாதனை படைத்து உச்சகட்ட ஃபார்மில் இருக்கிறார்.

- Advertisement -

மாஸ் கணிப்பு:
குறிப்பாக 2023இல் முதல் 9 மாதங்களில் மட்டும் 1230 ரன்களை 72 என்ற சராசரியில் குவித்துள்ள அவர் இந்திய மண்ணில் இரு மடங்கு அதிரடியாக செயல்பட்டு வருகிறார். அதிலும் குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி நடைபெறும் அகமதாபாத் தம்முடைய கோட்டையாக வைத்திருக்கும் அவர் ஹைதராபாத்தில் நியூசிலாந்துக்கு எதிராக இளம் வயதில் இரட்டை சதமடித்த வீரராக உலக சாதனை படைத்தார்.

அத்துடன் ஐபிஎல் 2023 தொடரில் இந்தியாவின் பல்வேறு மைதானங்களிலும் சிறப்பாக விளையாடி 800க்கும் மேற்பட்ட ரன்களை குவித்த அவர் ஆரஞ்சு தொப்பியை வென்று சாதனை படைத்தார். இந்நிலையில் சுப்மன் கில் குறைந்தபட்சம் 2 சதங்கள் அடித்து பெரிய ரன்கள் குவித்து 2023 உலகக் கோப்பையை தம்முடையதாக்கலாம் என்று ஆகாஷ் சோப்ரா அதிரடியான கணிப்பை வெளியிட்டுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இந்த தொடர் சுப்மன் கில்லுடையதாக இருக்கலாம். பொதுவாகவே உலகக் கோப்பை டாப் 3 பேட்ஸ்மேன்களுக்கு சொந்தமாக இருக்கும். அதில் நல்ல திறமையுடையவர்கள் நிறைய சாதனைகளை படைப்பார்கள். அந்த வகையில் கில் அதிக ரன்கள் அடிப்பார். இந்த தொடரில் அவர் குறைந்தது 2 சதங்கள் அடிப்பார் என்று நினைக்கிறேன். ஒருவேளை அவர் 3க்கும் மேற்பட்ட சதமடித்தாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன்”

இதையும் படிங்க: 213 சேசிங்.. 206 ஸ்ட்ரைக் ரேட்டில் 20 ஃபோர் 5 சிக்ஸ் – ஆஸியை நொறுக்கிய வெ.இ சிங்கப்பெண்.. 4 உலக சாதனை

“மேலும் களைப்படையாமல் விளையாடினால் அவரால் சில 150 ரன்களையும் அடிக்க முடியும். அதனால் இந்த உலகக் கோப்பை அவருடையதாக இருக்கலாம். சமீபத்திய ஆசிய கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிராக அவர் இடது கை ஸ்பின்னர்களுக்கு எதிராக தடுமாறியது போல் இருந்தது. ஆனால் அதிலும் ஒரு கட்டத்திற்கு பின் நங்கூரமாக நின்றுசிறப்பாக விளையாடிய அவர் தம்முடைய சிறந்த ஒருநாள் சதத்தை பதிவு செய்தார்” என்று கூறினார்.

Advertisement