213 சேசிங்.. 206 ஸ்ட்ரைக் ரேட்டில் 20 ஃபோர் 5 சிக்ஸ் – ஆஸியை நொறுக்கிய வெ.இ சிங்கப்பெண்.. 4 உலக சாதனை

hayley matthews
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிரணி அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதில் முதல் போட்டியில் எதிர்பார்த்ததை போலவே ஆஸ்திரேலியா அதிரடியான வெற்றி பெற்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்ற நிலையில் வெற்றியாளரை தீர்மானிக்கும் 2வது போட்டி அக்டோபர் ஆம் தேதி நார்த் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 1.35 மணிக்கு நடைபெற்றது.

அந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா மீண்டும் சொந்த மண்ணில் அதிரடியாக விளையாடி 20 ஓவர்களில் 212/6 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக நட்சத்திர வீராங்கனை 5 பவுண்டரி 4 சிக்சருடன் 70* (46) ரன்களும் லிட்சபீல்ட் 3 பவுண்டரி 5 சிக்சருடன் சரவெடியாக 52* (19) ரன்களும் வேர்ஹேம் 32* (13) ரன்களும் எடுத்தனர்.

- Advertisement -

உலக சாதனை வெற்றி:
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக கேப்டன் ஹெய்லே மேத்தியூஸ் 3 விக்கெட்களை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 213 என்ற மிகவும் கடினமான இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ்க்கு ஆரம்பத்திலேயே துவக்க வீராங்கனை கஜ்நபி 1 ரன்னில் அவுட்டாகி மாற்றத்தை கொடுத்தார். ஆனால் மறுபுறம் ஆரம்பத்திலிருந்தே ஆஸ்திரேலிய பவுலர்களை பந்தாடிய கேப்டன் மேத்யூஸ் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் வேகமாக ரன்களை சேர்த்தார்.

அவருக்கு அடுத்ததாக வந்த செர்ஃபான் டைலர் தம்முடைய பங்கிற்கு சற்று அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி கை கொடுத்தார். அதை பயன்படுத்திய மேத்யூஸ் தொடர்ந்து அதிரடியாக விளையாடி 50 ரன்களை கடந்தும் ஓயாமல் ஆஸ்திரேலியா பாவலர்களை அடித்து நொறுக்கினார். நேரம் செல்ல செல்ல அதிவேகமாக விளையாடிய அவர் சதத்தையும் விளாசி 20 பவுண்டரி 5 சிக்ஸருடன் 132 (64) ரன்கள் விளாசி வெற்றியை உறுதி செய்து அவுட்டானார்.

- Advertisement -

அவருடன் டைலர் 59 (41) ரன்கள் எடுத்ததால் 19.5 ஓவரில் 213?3 ரன்கள் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் வாயிலாக சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் 200 ரன்களை வெற்றிகரமாக எட்டிப் பிடித்த முதல் அணி மற்றும் அதிகபட்ச ஸ்கோரை சேசிங் செய்த அணி ஆகிய இரட்டை உலக சாதனைகளை வெஸ்ட் இண்டீஸ் படைத்தது. அத்துடன் 132 (64) ரன்களை 206 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்த கேப்டன் மேத்தியூஸ் சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் வெற்றிகரமாக சேசிங் செய்யப்பட்ட போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த வீராங்கனை என்ற உலக சாதனை படைத்தார்.

இதையும் படிங்க: அந்த டீம் மட்டும் செமி ஃபைனலுக்கு வந்துட்டா.. இந்தியா ஜெயிக்கிறது கஷ்டம் – ஆகாஷ் சோப்ரா

இதற்கு முன் 2018இல் இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து வீராங்கனை டேனியல் வைட் 124 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். அத்துடன் 174 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த மேத்தியூஸ் – டைலர் ஜோடி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் 150க்கும் மேற்பட்ட பார்ட்னர்ஷிப் ரன்களை அமைத்த முதல் ஜோடி என்ற உலக சாதனையும் படைத்தது. அதனால் 1 – 1* என வெஸ்ட் இண்டீஸ் தொடரை சமன் செய்த நிலையில் 3 விக்கெட்டுகளுடன் 132 ரன்கள் எடுத்த மேத்யூஸ் ஆட்டநாயகி விருது வென்றார்.

Advertisement