அந்த டீம் மட்டும் செமி ஃபைனலுக்கு வந்துட்டா.. இந்தியா ஜெயிக்கிறது கஷ்டம் – ஆகாஷ் சோப்ரா

Aakash Chopra 4
- Advertisement -

ஐசிசி உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் சொந்த மண்ணில் சிறப்பாக செயல்பட்டு ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா 2011 போல கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதற்கேற்றார் போல் 2023 ஆசிய கோப்பையை வென்று தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ள இந்திய அணியில் வீரர்களும் நல்ல ஃபார்முக்கு திரும்பியுள்ளது ரசிகர்களுக்கு புதிய தெம்பை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடி இந்திய சூழ்நிலைகளை பற்றியும் இந்திய வீரர்களின் பலம் பலவீனங்களையும் பற்றியும் நன்கு தெரிந்து வைத்துள்ளனர். எனவே சொந்த மண்ணாக இருந்தாலும் நிச்சயமாக அந்த வெளிநாட்டு அணிகள் இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று உறுதியாக சொல்லலாம்.

- Advertisement -

ஆபத்தான அணி:
இந்நிலையில் ஏற்கனவே 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் ஆஸ்திரேலியா மட்டும் இத்தொடரில் சிறப்பாக செயல்பட்டு செமி ஃபைனலுக்கு வந்தால் அவர்களை இந்தியா போன்ற மற்ற அணிகளால் தோற்கடித்து கோப்பையை வெல்வது கடினம் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ஏனெனில் ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் ஆஸ்திரேலியா எப்போதுமே ஆபத்தான அணியாக செயல்படும் தன்மை கொண்டது என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

“இத்தொடரில் செமி ஃபைனலுக்கு தகுதி பெறப்போகும் 4 அணிகளில் ஒன்றாக நிச்சயமாக ஆஸ்திரேலியா இருக்கும். குறிப்பாக ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஸ்ஷேன், மிட்சேல் மார்ஷ், கிளன் மேக்ஸ்வெல் ஆகியோர் சேர்ந்து ஆஸ்திரேலியாவை செமி ஃபைனலுக்கு அழைத்து வந்து விடுவார்கள் என்று நான் கருதுகிறேன். ஒருவேளை இந்த மஞ்சள் அணி செமி ஃபைனலுக்கு வந்தால் நாக் அவுட் போட்டிகளில் மற்ற அணிகளுக்கு மிகப்பெரிய சவாலை கொடுக்கும் ஆபத்தானவர்களாக இருப்பார்கள்”

- Advertisement -

“அவர்கள் இன்னும் விக்கெட் கீப்பரை இறுதி செய்யாமல் இருக்கின்றனர். குறிப்பாக ஜோஸ் இங்லிஷ் மற்றும் அலெக்ஸ் கேரி ஆகிய இருவருமே நல்ல வீரர்களாக இருக்கின்றனர். இருப்பினும் அதில் விளையாடும் 11 பேர் அணியில் இடம் பிடிக்கப் போவது யார்? என்பது ஆஸ்திரேலிய அணியில் இருக்கும் ஒரு பின்னடைவான அம்சமாகும். மேலும் சுழலுக்கு எதிராக அவர்கள் தடுமாறும் பிரச்சனையைக் கொண்டிருக்கின்றனர்”

இதையும் படிங்க: பளிங்கு கல் இல்லாம மாளிகையா? மைக்கேல் வாகனுக்கு மார்க் வாக் பதிலடி – நடந்தது என்ன

“அதே போல ஸ்டோனிஸ் மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோருடைய வேலைகள் இன்னும் தெளிவாக்கப்படாமல் இருக்கிறது. அதில் க்ரீனை விட மிடில் ஆர்டரில் சிறப்பாக செயல்பட கூடியவர் என்பதால் ஸ்டோனிஸ் விளையாட அதிக வாய்ப்புள்ளது. எப்படியிருந்தாலும் நல்ல அணியாக இருக்கும் ஆஸ்திரேலியா நிச்சயமாக டாப் 4 அணிகளில் ஒன்றாக இருக்கும் என்பதை என்னுடைய கணிப்பாகும்” என்று கூறினார்.

Advertisement