பளிங்கு கல் இல்லாம மாளிகையா? மைக்கேல் வாகனுக்கு மார்க் வாக் பதிலடி – நடந்தது என்ன

Mark Waugh 2
- Advertisement -

இந்தியாவில் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 தேதி வரை நடைபெறும் ஐசிசி 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அபாரமாக விளையாடி சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார் என்று எதிர்பார்ப்பு அனைவரிடமும் காணப்படுகிறது. 1987, 1996, 2011 ஆகிய வருடங்களைப் போல் அல்லாமல் முதல் முறையாக முழுவதுமாக இந்திய மண்ணில் மட்டுமே நடைபெறும் இந்த தொடரில் கோப்பையை வெல்வதற்கு உலகின் டாப் 10 கிரிக்கெட் அணிகள் மொத்தம் 48 போட்டிகளில் விளையாட உள்ளன.

அதில் எப்போதுமே சொந்த மண்ணில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தக்கூடிய அணியாகவும் தற்சமயத்தில் ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாகவும் இருக்கும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா 2011 போல கோப்பையை வெல்லும் என்று நிறைய முன்னாள் வீரர்கள் கணித்து வருகின்றனர். அதே போல இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடி இந்திய சூழ்நிலைகளை நன்றாக தெரிந்து வைத்துள்ளனர்.

- Advertisement -

பளிங்கு இல்லாத கணிப்பு:
அதன் காரணமாக இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலை கொடுத்து நடப்பு சாம்பியன் இங்கிலாந்து போன்ற வெளிநாட்டு அணிகளும் கோப்பையை வெல்வதற்கு அதிகப்படியான வாய்ப்பிருப்பதாக கணிப்புகள் காணப்படுகின்றன. இந்நிலையில் 2023 உலகக் கோப்பையில் சிறப்பாக செமி ஃபைனலுக்கு 4 அணிகளை பற்றி முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் ட்விட்டரில் பதிவிட்டது பின்வருமாறு.

“இந்த வாரம் துவங்கும் உலகக் கோப்பையை காண்பதற்கு காத்திருக்க முடியவில்லை. செமி ஃபைனலுக்கு தகுதி பெறப்போகும் என்னுடைய 4 அணிகள். இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான்” என்று தெரிவித்துள்ளார். அந்த பதிவை பார்த்த முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மார்க் வாக் “நீங்கள் உங்களுடைய பளிங்குகளை இழந்து விட்டீர்கள்” என்று பதிலளித்து அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

- Advertisement -

அதாவது ஏற்கனவே 5 கோப்பைகளை வென்று வரலாற்றின் தவிர்க்க முடியாத வெற்றிகரமான அணியாக திகழும் ஆஸ்திரேலியா இல்லாத இந்த பட்டியல் பளிங்கு கல் இல்லாத ஆடம்பர மாளிகையை போல் இருப்பதாக அவருக்கு மார்க் வாக் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுவது போல உலகிலேயே ஆடவர் மற்றும் மகளிர் என அனைத்து வகையான ஐசிசி தொடர்களில் அதிக சாம்பியன் பட்டங்களை வென்ற அணியாக சாதனை படைத்துள்ள ஆஸ்திரேலியா எப்போதுமே உலகக்கோப்பை என்றால் கில்லியாக செயல்படுவது வழக்கமாகும்.

இதையும் படிங்க: உலகக்கோப்பை 2023 : முதல் போட்டியை தவறவிட இருக்கும் நட்சத்திர வீரர் – நியூசி அணிக்கு பின்னடைவு

அதிலும் குறிப்பாக ஆடவர் கிரிக்கெட்டில் தங்களுடைய முதல் உலகக் கோப்பையை கடந்த 1987ஆம் ஆண்டு இந்திய மண்ணில் தான் ஆலன் பார்டர் தலைமையிலான ஆஸ்திரேலியா வென்று சாதனை படைத்தது. எனவே சமீபத்தில் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் வென்ற ஆஸ்திரேலியா இந்த உலகக் கோப்பையிலும் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிகளில் ஒன்றாக களமிறங்கும் என்பதில் சந்தேகமில்லை.

Advertisement