உலகக்கோப்பை 2023 : முதல் போட்டியை தவறவிட இருக்கும் நட்சத்திர வீரர் – நியூசி அணிக்கு பின்னடைவு

Tim-Southee
- Advertisement -

இந்தியாவில் எதிர்வரும் அக்டோபர் 5-ஆம் தேதி ஐசிசி-யின் 13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது கோலாகலமாக துவங்கவுள்ளது. இந்த உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியும், கடந்த முறை இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்காக தற்போது இவ்விரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே இந்த உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக இந்தியா வந்து பயிற்சி போட்டிகளில் விளையாடி வரும் நியூசிலாந்து அணியில் சில வீரர்களுக்கு ஏற்பட்டுள்ள காயமானது அந்த அணிக்கு அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அந்த வகையில் இந்த உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் கேன் வில்லியம்சன் விளையாட மாட்டார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

- Advertisement -

இந்நிலையில் தற்போது நியூசிலாந்து அணிக்கு மேலும் ஒரு பின்னடைவாக அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான டிம் சவுதி இங்கிலாந்து அணிக்கு எதிரான உலககோப்பை தொடரின் முதல் போட்டியில் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏனெனில் அண்மையில் நடைபெற்று முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது கட்டை விரலில் காயமடைந்த டிம் சவுதி தற்போது தான் படிப்படியாக அந்த காயத்திலிருந்து மீண்டு வருகிறார். இதன் காரணமாக அவர் முழுவதுமாக குணமடையும் முன்னர் அவரை களமிறக்க வேண்டாம் என்று நியூசிலாந்து அணியின் நிர்வாகம் நினைக்கிறது.

- Advertisement -

இதன் காரணமாக அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாட மாட்டார் என்றே தெரிகிறது. ஏற்கனவே பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற முதலாவது பயிற்சி போட்டியிலும் சவுதி விளையாடாத வேளையில் கேன் வில்லியம்சன் மட்டும் பயிற்சி போட்டியில் விளையாடி 54 ரன்கள் அடித்து அசத்தியிருந்தார்.

இதையும் படிங்க : தங்கம் வாங்க தோனி ஸ்டைல் ஃபாலோ பண்ணா மட்டும் போதாது.. கேப்டன் ருதுராஜ் பேட்டி

இருப்பினும் அவரும் முன்னெச்சரிக்கையாக இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாட மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. இப்படி ஒரே நேரத்தில் வில்லியம்சன் மற்றும் டிம் சவுதி ஆகிய இருவரும் விளையாட முடியாமல் போனால் அது நியூசிலாந்து அணிக்கு பெரிய பின்னடைவை தரும் என்றே கூறலாம். இதுவரை நியூசிலாந்து அணிக்காக 157 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள டிம் சவுதி 200 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement