தங்கம் வாங்க தோனி ஸ்டைல் ஃபாலோ பண்ணா மட்டும் போதாது.. கேப்டன் ருதுராஜ் பேட்டி

Ruturaj Gaikwad
- Advertisement -

சீனாவில் நடைபெற்று வரும் 2023 ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஆடவர் கிரிக்கெட் பிரிவில் ருதுராஜ் கைக்வாட் தலைமையிலான இளம் இந்திய அணி தங்களுடைய முதல் போட்டியில் நேபாளை எதிர்கொள்கிறது. இந்த தொடரில் ஏற்கனவே சிறப்பாக விளையாடி தங்கம் வென்ற இந்திய மகளிர் அணியை போலவே ஐசிசி தர வரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பதால் ஆடவர் அணி நேரடியாக காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.

அதைத்தொடர்ந்து அக்டோபர் 3ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 6.30 மணிக்கு நடைபெறும் முதல் காலிறுதி போட்டியில் தகுதி சுற்றில் மங்கோலியாவை அடித்து நொறுக்கி பல உலக சாதனைகள் படைத்து வந்துள்ள நேபாளை இளம் இந்திய அணி எதிர்கொள்வது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் ஒரு பேட்ஸ்மேனாக இதற்கு முன் தம்முடைய திறமையை நிரூபித்துள்ள ருதுராஜ் கேப்டனாக எப்படி செயல்பட போகிறார் என்பதைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

- Advertisement -

தோனியின் ஸ்டைல்:
உள்ளூர் கிரிக்கெட்டில் மகாராஷ்டிரா அணியின் கேப்டனாக செயல்பட்ட அனுபவத்தை கொண்டு அவர் ஐபிஎல் தொடரில் 3 உலகக் கோப்பைகளை வென்ற மகத்தான தோனியின் தலைமையில் விளையாடியுள்ளார். எனவே தோனியிடமிருந்து அவர் நிறைய கேப்டன்ஷிப் பண்புகளை பற்றி தொடரில் பயன்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இத்தொடரில் தங்கப் பதக்கத்தை வெல்ல தோனியிடமிருந்து கற்ற விஷயங்களுடன் தம்முடைய ஸ்டைலை பின்பற்றவுள்ளதாக தெரிவிக்கும் ருதுராஜ் இது பற்றி பேசியது பின்வருமாறு. “தோனியிடமிருந்து நான் நிறைய விஷயங்களை நான் கற்றுள்ளேன். ஆனால் ஒவ்வொரு மனிதருக்கும் வித்தியாசமான ஸ்டைல் இருக்கும். அந்த வகையில் அவருடைய ஸ்டைல் மற்றும் பர்சனாலிட்டி வித்தியாசமானதை போலவே என்னுடையதும் வித்தியாசமானதாகும்”

- Advertisement -

“எனவே அவர் என்ன செய்தார் என்பதை மட்டும் பார்க்காமல் நான் என்னுடைய வழிகளை பின்பற்றி செயல்பட உள்ளேன். அதே சமயம் எப்படி கடினமான சூழ்நிலைகளை சமாளிப்பது போட்டியின் போது முக்கிய வீரர்களை கையாள்வது போன்ற அவர் செய்த சிறப்பான விஷயங்களையும் நாம் பின்பற்றுவது அவசியமாகும். இதைத்தான் நானும் அவரிடம் இருந்து கற்றுக் கொண்டேன். இருப்பினும் நான் என்னுடைய வழியில் அணியை வழி நடத்த விரும்புகிறேன்”

இதையும் படிங்க: இந்தியாவில் எனக்கு பிடித்த 3 விடயங்கள் இதுதான். ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த – டேவிட் வார்னர்

“குறிப்பாக அணியில் இருக்கும் அனைத்து வீரர்களுக்கும் நான் முழுமையான சுதந்திரம் கொடுக்க உள்ளேன். அதை பயன்படுத்தி அவர்கள் தங்களுடைய முழு திறமையை வெளிப்படுத்த விரும்புகிறேன். அத்துடன் இந்த தொடரில் கிரிக்கெட்டை தாண்டி பல்வேறு விளையாட்டு வீரர்கள் எப்படி கடினமாக உழைத்து வந்துள்ளார்கள் என்பதையும் நாங்கள் பார்த்தோம். இத்தொடரில் பதக்கங்கள் வென்ற அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்” என்று கூறினார்.

Advertisement