இந்தியாவில் எனக்கு பிடித்த 3 விடயங்கள் இதுதான். ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த – டேவிட் வார்னர்

Warner
- Advertisement -

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி துவக்க வீரரான டேவிட் வார்னர் இந்திய ரசிகர்கள் மத்தியில் அதிக அதிகம் விரும்பப்படும் வெளிநாட்டு வீரர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். ஐபிஎல் தொடரில் விளையாட அறிமுகமானதிலிருந்து தற்போது வரை அவருக்கு இந்தியாவிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக ஆண்டுதோறும் தவறாமல் ஐபிஎல் தொடரில் விளையாடும் வார்னர் இந்திய பாடல்களுக்கு நடனம் ஆடுவது, ரீல்ஸ் செய்வது, ரசிகர்களுடன் உரையாடுவது என எப்பொழுதுமே சமூக வலைதள பக்கத்தின் மூலம் இந்திய ரசிகர்களுடன் நெருங்கிய பிணைப்பினை வைத்திருப்பவர்.

அதிரடி இடது கை துவக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் கடந்த 2009-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி இன்றளவும் தொடர்ச்சியாக ஆண்டுதோறும் விளையாடி வருகிறார். தற்போது டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

- Advertisement -

ஏற்கனவே கடந்த 2016-ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஐபிஎல் கோப்பையை வென்ற கேப்டன் என்ற பெருமையும் பெற்றிருந்தார். இப்படி ஆண்டுதோறும் மூன்று மாதங்கள் இந்தியாவில் கழிக்கும் டேவிட் வார்னர் இந்திய ரசிகர்கள் மீதும் மிகப்பெரிய அன்பு மற்றும் மரியாதையை வைத்துள்ளார். ரசிகர்களும் அவர்மீது அன்பை பொழிந்து வருகின்றனர்.

இந்நிலையில் உலககோப்பை தொடரில் பங்கேற்று விளையாட இந்தியா வந்திருக்கும் டேவிட் வார்னரிடம் தற்போது இந்திய ரசிகர் ஒருவர் டிவிட்டரின் மூலம் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு அவர் அளித்த பதிலானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

அந்த வகையில் இந்திய ரசிகர் : இந்தியாவில் உங்களுக்கு மிகவும் பிடித்த மூன்று விடயங்களை பற்றி கூறுங்கள் என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த வார்னர் : மக்கள், உணவு மற்றும் இங்கு எனக்கு கிடைக்கும் அன்பான வரவேற்பு மூன்றுமே அலாதியானது என்று தனது பதிலை அளித்துள்ளார் அவரது இந்த ரிப்ளை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : விராட் கோலி பற்றி ஒரே வார்த்தையில் சொல்லுங்க? ரசிகரின் கேள்விக்கு – சோயிப் அக்தர் கொடுத்த ரிப்ளை

ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரரான டேவிட் வார்னர் அண்மையில் நடைபெற்று முடிந்த இந்திய அணிக்கு எதிரான தொடரின் மூன்று போட்டியிலும் அரைசதம் அடித்து அசத்தியிருந்தார். அதோடு அடுத்த ஆறு-ஏழு வாரங்களுக்கு எவ்வாறு விளையாடப் போகிறேன் என்பதை இந்திய தொடரிலேயே நிரூபித்துள்ளதால் இந்த உலகக் கோப்பை தொடரிலும் அவரது ஆட்டம் பிரமாதமாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது.

Advertisement