விராட் கோலி பற்றி ஒரே வார்த்தையில் சொல்லுங்க? ரசிகரின் கேள்விக்கு – சோயிப் அக்தர் கொடுத்த ரிப்ளை

Shoaib-Akhtar-and-Kohli
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான விராட் கோலி கடந்த 2020 முதல் 2022 ஆம் ஆண்டு வரை ஒரு பெரிய சறுக்கலை சந்தித்திருந்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் 70-வது சதத்தை அடித்த அவர் தனது 71-வது சதத்திற்காக கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் காத்திருந்தார். அதன் பிறகு 71-வது சதத்தை ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக பூர்த்தி செய்தார். அதோடு அண்மையில் பாகிஸ்தான் அணிக்கெதிராக நடைபெற்ற ஆசியக்கோப்பை போட்டியில் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 47-வது சதத்தை பதிவு செய்திருந்தார்.

அதனை தொடர்ந்து தற்போது அட்டகாசமான பார்மில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் எதிர்வரும் 2023-ஆம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் மூன்றாவது வீரராக களமிறங்கி விளையாட இருக்கிறார்.

- Advertisement -

நான்காவது முறையாக உலக கோப்பை தொடரில் விளையாட இருக்கும் விராட் கோலி 2011-ஆம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை வென்ற அணியில் இடம் பிடித்திருந்தார். அதோடு இம்முறையும் வெற்றி பெற்று இரண்டு முறை உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பிடித்த வீரர் என்ற சாதனையை படைக்க மும்முரமாக தயாராகி வருகிறார்.

இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளாகவே மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விராட் கோலி குறித்து ரசிகர் ஒருவர் டிவிட்டரில் எழுப்பிய கேள்விக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயிப் அக்தர் பதிலளித்துள்ளது தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

- Advertisement -

அந்த வகையில் டிவிட்டரில் ரசிகர்களின் கேள்விக்கு அவ்வப்போது பதிலளித்து வரும் சோயிப் அக்தரிடம் ரசிகர் ஒருவர் : ஒரே வார்த்தையில் விராட் கோலி குறித்து கூறுங்கள்? என்று கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு பதிலளித்த சோயிப் அக்தர் : “லெஜண்ட் ஆல்ரெடி” என்று பதில் அளித்துள்ளார்.

இதையும் படிங்க : 2023 உலக கோப்பையுடன் 33 வயதிலேயே ஓய்வா? ஏமாற்றமான முக்கிய அறிவிப்பை வெளியிட்ட – ஜோஸ் பட்லர்

இதன் மூலம் விராட் கோலி ஏற்கனவே லெஜெண்ட் பட்டியலில் இணைந்து விட்டார் என்று குறிப்பிட்டுள்ளார். அண்மையில் நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பை தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பாகிஸ்தான் அணிக்கு எதிராக சதமடித்த விராட் கோலி உலகக் கோப்பை தொடரிலும் அக்டோபர் 14-ஆம் தேதி நடைபெறவுள்ள போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement