2023 உலக கோப்பையுடன் 33 வயதிலேயே ஓய்வா? ஏமாற்றமான முக்கிய அறிவிப்பை வெளியிட்ட – ஜோஸ் பட்லர்

Jos Buttler
- Advertisement -

உலக கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை நிர்ணயிக்கும் ஐசிசி உலக கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை இந்தியாவில் நடைபெற உள்ளது. பொதுவாக இது போன்ற ஐசிசி தொடர்கள் கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிப்பது மட்டுமல்லாமல் பல நட்சத்திர வீரர்களின் கேரியரை தீர்மானிப்பதிலும் முக்கிய பங்காற்றி வருகிறது என்றே சொல்லலாம்.

அதாவது நாட்டுக்காக நிறைய வருடங்கள் விளையாடி ரசிகர்களிடம் புகழ்பெற்ற வீரர்கள் இது போன்ற ஐசிசி தொடர்களை மையப்படுத்தியே தங்களுடைய ஓய்வு முடிவை அறிவிப்பது வழக்கமாகும். அதை விட தற்போது டி20 கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக நிறைய வீரர்கள் இளம் வயதிலேயே ஒருநாள் போட்டிகளிலிருந்து விடை பெறுவதும் வாடிக்கையாகியுள்ளது. எடுத்துக்காட்டாக தென்னாப்பிரிக்க வீரர் குயின்டன் டீ காக் 31 வயதிலேயே இந்த உலகக் கோப்பையுடன் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக கடந்த மாதம் அறிவித்தார்.

- Advertisement -

பட்லர் அறிவிப்பு:
அந்த வரிசையில் இணைந்துள்ள இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் மற்றும் கேப்டன் ஜோஸ் பட்லர் இந்த உலகக் கோப்பையுடன் ஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதை மறைமுகமாக அறிவித்துள்ளார். இருப்பினும் இப்போதே நேரடியாக ஓய்வை அறிவித்தால் அது அணியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கும் அவர் உலகக்கோப்பை முடிந்ததும் விடை பெறுவதாக சூசகமாக கூறியுள்ளார். இது பற்றி மெயில் ஸ்போர்ட்ஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

“இங்கிலாந்துக்காக நான் இன்னும் நீண்ட காலம் விளையாடுவார் என்று நம்புகிறேன். இப்போது நான் 33 தொட்டாலும் அவ்வளவு வயதை எட்டியதாக உணரவில்லை. மேலும் நாட்டுக்காக விளையாடுவதிலிருந்து யாரும் அவ்வளவு சீக்கிரம் செல்ல விரும்ப மாட்டார்கள். ஏனெனில் அது உங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவமாகும். அந்த இடத்தில் தான் நான் என்னுடைய கேரியரில் இருக்கிறேன். இன்னும் எனக்குள் இருக்கும் திறமையை வெளிப்படுத்த நான் அவளுடன் காத்திருக்கிறேன்”

- Advertisement -

“குறிப்பாக இன்னும் நான் ஒரு வீரராக நிறைய அம்சங்களில் முன்னேற வேண்டியுள்ளது என்று கருதுகிறேன். அது உங்களுக்கு எப்போதுமே உத்வேகத்தை கொடுப்பதாக இருக்கிறது. இருப்பினும் தற்போது நிலைமை மாறியுள்ளது. அனைவருக்கும் இங்கே நிறைய வாய்ப்புகள் கிடைக்கிறது. அதே சமயம் எங்களுடைய அணியில் இதுவரை யாரும் ஓய்வு பற்றிய எண்ணத்துடன் இருப்பதாக எனக்கு தெரியவில்லை”

இதையும் படிங்க: ஏசியன் கேம்ஸ் 2023 : ருதுராஜ் தலைமையில் தரமான இந்திய உத்தேச 11 பேர் இளம் அணி இதோ

“ஆனால் தற்போது உலகக் கோப்பையை வெல்வதில் கவனம் செலுத்தும் இந்த சூழ்நிலையில் தான் எங்களுடைய கடைசி தொடர் என்று சொல்லி அழுத்தத்தை ஏற்படுத்த விரும்பவில்லை. ஏனெனில் நாங்கள் ஒரு அணியாக உலகக்கோப்பை வெல்வதற்கு போராட உள்ளோம். ஆனால் தற்போதைக்கு மற்றவற்றை உள்ளே கொண்டு வர விரும்பவில்லை” என்று கூறினார். அதாவது உலகக் கோப்பைக்கு பின் ஒருநாள் போட்டிகளிலிருந்து விடை பெற்று டி20 கிரிக்கெட்டில் கவனம் செலுத்த உள்ளதாக அவர் கூறுவது குறிப்பிடத்தக்கது

Advertisement