ஏசியன் கேம்ஸ் 2023 : ருதுராஜ் தலைமையில் தரமான இந்திய உத்தேச 11 பேர் இளம் அணி இதோ

Asian Games Ruturaj Rinku
- Advertisement -

சீனாவில் உச்சகட்ட பரபரப்புடன் நடைபெற்று வரும் 2023 ஆசிய விளையாட்டு போட்டிகளில் 2014க்குப்பின் முதல் முறையாக டி20 வடிவமாக கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது. அதில் கடந்த வாரம் நடைபெற்று முடிந்த மகளிர் பிரிவில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணியினர் தங்க பதக்கத்தை வென்று தேசத்திற்கு பெருமை சேர்த்தனர். இதைத்தொடர்ந்து தற்போது ஆடவர் அணியினர் விளையாடும் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

அதில் ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக ஜொலிக்கும் இந்தியா நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெற்றது. ரோகித் சர்மா தலைமையிலான முதன்மை அணி உலக கோப்பையில் விளையாடுவதால் இத்தொடரில் விளையாடுவதற்காக ருதுராஜ் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட அணி அறிவிக்கப்பட்டதை ஏற்கனவே அறிவோம். அந்த நிலைமையில் தகுதி சுற்றில் நேபாள், ஹாங்காங், ஆப்கானிஸ்தான் மற்றும் மலேசியா ஆகிய 4 அணிகள் வெற்றி பெற்று காலிறுதி சுற்று தகுதி பெற்றன.

- Advertisement -

பிளேயிங் லெவன்:
அதை தொடர்ந்து துவங்கும் காலிறுதி சுற்றில் அக்டோபர் 3ஆம் தேதி இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு ஹங்கொழு நகரில் நேபாள் அணியை இந்தியா எதிர்கொள்கிறது. அப்போட்டியில் மங்கோலியாவை சரமாரியாக அடித்து நொறுக்கி யுவராஜ், ரோஹித் சாதனைகளை உடைத்த வீரர்களுடன் பல உலக சாதனைகள் படைத்த நேபாள் அணியை இளம் இந்திய அணி சாய்க்குமா என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.

அந்த நிலையில் இப்போட்டியில் துவக்க வீரர்களாக சந்தேகமின்றி கேப்டன் ருத்ராஜுடன் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் அறிமுகமாகி அட்டகாசமாக செயல்பட்டு நல்ல ஃபார்மில் இருக்கும் ஜெய்ஸ்வால் களமிறங்குவார் என்று சொல்லலாம். அதே போல 3வது இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அசத்திய இளம் வீரர் திலக் வர்மா களமிறங்க அதிக வாய்ப்புள்ளது.

- Advertisement -

மேலும் மிடில் ஆர்டரில் தாங்கி பிடித்து ஃபினிஷிங் செய்வதற்காக ஐபிஎல் தொடரில் 5 சிக்ஸர்கள் அடித்து சமீபத்திய அயர்லாந்து தொடரில் மிரட்டிய ரிங்கு சிங் மற்றும் சிவம் துபே ஆகியோர் விளையாடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. அவர்களைத் தொடர்ந்து விக்கெட் கீப்பராக அதிரடி வீரர் ஜிதேஷ் சர்மா முதன்மை சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டராக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் இருப்பார்கள். அதே போல முதன்மை ஸ்பின்னராக ரவி பிஸ்னோய் வேகப்பந்து வீச்சாளர்களாக அர்ஷிதீப், ஆவேஷ் கான், ஆகாஷ் டீப் ஆகியோர் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: அப்பப்பா இந்த பையன் வேறலெவல்.. தொடரும் அசத்தல் – சாய் சுதர்சன் இந்திய அணிக்கு ஆடப்போவது உறுதி

இந்திய உத்தேச 11 பேர் அணி: ருதுராஜ் கைக்வாட் (கேப்டன்), யசஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா (கீப்பர்), சிவம் துபே, ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷிதீப் சிங் , ஆவேஷ் கான், ஆகாஷ் தீப்

Advertisement